மொராதாபாத்தைச் சேர்ந்தவர் சர்வேஷ் சிங். இவர் ஒரு அரசு உதவி ஆசிரியராக இருந்தார், மேலும் SIR இன் போது BLO ஆக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் பணி மன அழுத்தம் காரணமாக, அவர் தற்கொலை செய்து கொண்டார், மேலும் தனது துயரத்தை ஒரு கடிதத்தில் எழுதி வைத்துள்ளார்ர். அதில், நான் வாழ விரும்புகிறேன், ஆனால் நான் என்ன செய்ய முடியும்? நான் மிகவும் அமைதியற்றவனாகவும், மன அழுத்தத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளேன். என் நான்கு சிறிய மகள்களும் மிகவும் அப்பாவிகள். தயவுசெய்து அவர்களை கவனித்துக் கொள்ளுங்கள். இதை எழுதும் போது, நான் மிகவும் வேதனைப்படுகிறேன். எனது சேவையிலிருந்து வர வேண்டிய தொகையை என் மனைவிக்கு வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
Sarvesh Singh, a Booth Level Officer (BLO) from #Moradabad, #UttarPradesh, who allegedly died by suicide after citing work pressure and target deadlines related to the SIR, recorded his final moments. https://t.co/NGFW2bG5pb pic.twitter.com/9mwuWV6yxP
— Hate Detector 🔍 (@HateDetectors) December 1, 2025
இந்நிலையில் இவர் தன்னுடைய பணி அழுத்தம் குறித்து கதறி அழும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பணி அழுத்தம் மற்றும் SIR தொடர்பான இலக்கு காலக்கெடுவை காரணம் காட்டி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் அவரது இறுதி தருணங்களைப் பதிவு செய்தார்.
