தமிழகத்தில் அடுத்த வருடம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கு பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. அதேசமயம் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் முயற்சியிலும் டெல்லி தலைமை தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய்யை தங்கள் கட்சியில் இணைக்கும் முயற்சி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக இபிஎஸ் தொடர்ந்து விஜய் இடம் பேச்சுவார்த்தை நடத்திவரும் நிலையில் சமீபத்தில் கூட கூட்டணிக்கு பிள்ளையார் சூழலில் போடப்பட்டு விட்டதாக சூசகமாக தெரிவித்திருந்தார். ஆனால் சமீபத்தில் தமிழக வெற்றிக்கழகம் நடத்திய பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் விஜய் தான் என அறிவிக்கப்பட்டு விட்டது. இதனால் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்பது ஏறத்தாழ உறுதியாகி உள்ளது.
இருந்தாலும் விஜய்யை விடுவதற்கு பாஜக தயாராக இல்லை என தெரிகிறது. அதாவது 2026 தேர்தல் கூட்டணி தொடர்பாக பாஜகவுக்கு மனமாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து உளவுத்துறை நடத்திய சர்வேவில், அதிமுக மற்றும் தமிழக வெற்றி கழகம் கூட்டணி வைத்தால் நிச்சயம் திமுக வீழ்த்தப்படும் என தெரியவந்துள்ளது. இதன் காரணமாக பாஜகவை காரணம் காட்டி கூட்டணியில் சேர்வதற்கு விஜய் மறுப்பு தெரிவித்தால் சில தியாகங்களை செய்வதற்கும் டெல்லி தலைமை முன்வந்துள்ளது. அதன்படி அதிமுக கூட்டணியில் இருந்து விலகினால் தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து பாஜக தலைமை சிந்தித்து வரும் நிலையில் கூட்டணி குறித்து அறிவிப்பை விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…
திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…