“பீச்சில் கள்ளக்காதலியுடன் நெருக்கமாக…” ஆட்டோ டிரைவரை சுற்றி வளைத்த கும்பல்…. அடுத்து நடந்த பயங்கர சம்பவம்….!!

Spread the love

சென்னை மெரினா நொச்சிக்குப்பம் லூப் சாலை அருகிலுள்ள கடற்கரை பகுதியில் நேற்று நள்ளிரவு 1.30 மணிக்கு கொடூரமான சம்பவம் நடந்தது. கடற்கரையில் தூங்குவதற்காகச் சென்ற சில பொதுமக்கள், மணலில் ஒரு நபர் மயங்கி விழுந்து கிடப்பதைக் கண்டனர். அவரது தலையின் பின்புறம் பயங்கரமான வெட்டுக்காயங்கள் இருந்தன. இதைப் பார்த்து பதறிய பொதுமக்கள் உடனடியாக மெரினா போலீஸ் நிலையத்துக்கு தகவல் தந்தனர்.

போலீசார் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்து, உயிருக்கு போராடிய நபரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.  உயிரிழந்த நபரின் ஷர்ட் பாக்கெட்டில் இருந்த ஏடிஎம் கார்ட்டைப் பயன்படுத்தி விசாரித்தபோது, கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த 40 வயது அந்தோணி என்பவர்தான் இறந்தவர் எனத் தெரியவந்தது. அந்தோணி ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்தார். அவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

ஆனால் பட்டினப்பாக்கத்தில் ஒரு பெண்ணுடன் அந்தோணிக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. அந்தப் பெண்ணுக்கும் திருமணம் ஆகி பெண் குழந்தைகள் உள்ளனர். அவர் நொச்சிக்குப்பத்தில் மீன் விற்று வாழ்கிறார். கடந்த வாரம் இந்தக் கள்ளக்காதல் ஜோடி நெருக்கமாக இருந்தபோது, பெண்ணின் உறவினர்கள் அந்தோணியை கடுமையாக எச்சரித்து அடித்து விரட்டியதாகக் கூறப்படுகிறது. அப்போது பெண்ணின் மகள்களும் அந்தோணியை அடித்ததாகத் தெரிகிறது.

நேற்று தனது அக்காவுக்கு குழந்தை பிறந்ததால் அதைப் பார்க்க வருவதாக மனைவியிடம் பொய் சொல்லிவிட்டு கள்ளக்காதலியை சந்திக்க அந்தோணி மெரினா கடற்கரைக்குச் சென்றார். அதேபோல் கள்ளக்காதலியும் அந்தோணியை சந்திக்க மெரினா கடற்கரைக்கு வந்தார். இருவரும் நள்ளிரவு வரை கடற்கரையில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென வந்த சிலர் அந்தோணியை சரமாரியாகத் தாக்கினர். பின்னர் கத்தியால் தலையை ஆவேசமாக வெட்டிவிட்டு தப்பினர்.

அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு தப்பியோடியவர்களைத் தேடி வருகின்றனர். அவர்களைப் பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையில் நள்ளிரவில் ஆட்டோ டிரைவரின் கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Devi Ramu

Recent Posts

“106 சீட்கள்.. இன்னும் 13 தான் பாக்கி” திரைமறைவில் நடக்கும் மெகா டீல்.. தவெக-விற்கு ஆதரவாக காங்கிரஸ்… தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு..!!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…

2 மணத்தியாலங்கள் ago

அமைதியாக வந்து அரியணையைத் தூக்கிய அணில்கள்! ஸ்டாலினையே வீழ்த்திய விஜய்யின்

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…

3 மணத்தியாலங்கள் ago

“வேலை செய்யும் இடத்திற்கே வந்து” கணவர் செய்த அந்த காரியம்… மேடையிலேயே பகிர்ந்த மனைவி… கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!!

பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…

5 மணத்தியாலங்கள் ago

BREAKING: இன்னும் சற்று நேரத்தில் பதவியை ராஜினாமா செய்கிறார் ஸ்டாலின்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…

5 மணத்தியாலங்கள் ago

“எவ்வளவு தான் பொறுத்துக்கொள்வேன்? காதலனைச் சுட்டுக்கொன்ற தாய்… 10 வயது மகளுக்கு 2 ஆண்டாக நடந்த பயங்கரம்… உறைந்து போன போலீஸ்..!!

திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…

5 மணத்தியாலங்கள் ago

திராவிட அரசியலில் மெகா அதிரடி..! திமுக – அதிமுக கைகோர்க்குமா..? தொங்கு சட்டசபை கொடுத்த ஷாக் ரிப்போர்ட்..!!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…

6 மணத்தியாலங்கள் ago