தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே அதிமுகவில் நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வரும் நிலையில் முக்கிய நிர்வாகிகள் பலரும் கட்சியில் இருந்து அதிரடியாக விலகி வருகிறார்கள். சமீபத்தில் செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதால் இபிஎஸ் மீது நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்புக்கு இபிஎஸ் மறுத்தால் புதிய கூட்டணியை உருவாக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. 2024 தேர்தலை போல டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ், செங்கோட்டையன், ஜான் பாண்டியன், கிருஷ்ணசாமி ஆகியோரை இணைத்து பாஜக போட்டியிடும் என கூறப்படுகிறது. நயினார் நாகேந்திரனும் தங்களது இலக்கு 2026 அல்ல 2029 என பேசி இருந்தார். டிசம்பர் மாதத்தில் கூட்டணி அறிவிக்கப்படும் என டிடிவி தினகரன் பேசி வருகிறார். எனவே வருகின்ற டிசம்பர் மாதத்தில் காட்சிகள் மாறக்கூடும்.
திருச்சி கிழக்கு தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் போட்டியிடப் போவதாக எழுந்த வதந்திகளுக்கு அவரே முற்றுப்புள்ளி…
தமிழகத்தில் நடிகர் விஜய் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டம் பெரும்…
சின்னத்திரை மற்றும் சினிமா உலகில் சமீப காலமாக இளம் வயது பிரபலங்களின் மரணங்கள் தொடர்கதையாகி வருவது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை…
வீடுகளில் பயன்படுத்தப்படாமல் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தும் நோக்கில், 'தங்கத்தை பணமாக்கும் திட்டத்தை' முழுவீச்சில்…
தமிழக அரசியலில் தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியிருப்பது, தமிழக வெற்றிக் கழகம் மேற்கொண்டு வரும் 'ஆள் தூக்கும்' அரசியல்…
2026 தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து, தமிழக அரசியல் களம் இதுவரை கண்டிராத…