தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. என்னதான் இபிஎஸ் முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டாலும் தங்கள் ஆட்சியை எப்படியாவது தமிழகத்தில் நிலைநாட்ட வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. அதேசமயம் புதிதாக கட்சியை தொடங்கியுள்ள விஜயை தங்கள் கூட்டணியில் இழுக்கும் முயற்சியிலும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மற்றொரு பக்கம் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணிகளும் மும்முறமாக நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் கரூர் விவகாரத்தைத் தொடர்ந்து தமிழக வெற்றி கழகம் கட்சியை பாஜக கூட்டணியில் இணைக்க அமித்ஷா திட்டம் தீட்டி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் கூட்டணிக்கு விஜய் வர மறுப்பதாக தெரிகிறது. இருந்த போதிலும் விடாப்பிடியாக பாஜக அவரை கூட்டணியில் இணைக்க பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது. மேலும் தமிழ்நாடு வரவிருக்கும் அமித்ஷா விஜயை நேரில் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போதும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லை என்றால் தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு ஆப்பு வைக்க பாஜக ரெடியாக இருப்பதாக கூறப்படுகிறது. இது தமிழக அரசியலில் புதிய புயலைக் கிளப்பியுள்ளது.
