பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் விஜய்… திமுக ஆசை நிறைவேறும்… நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேட்டி…!

By Nanthini on கார்த்திகை 18, 2025

Spread the love

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் ஐந்து மாதங்கள் மட்டுமே உள்ளதால் அனைத்து கட்சிகளும் தேர்தல் களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றன. ஒவ்வொரு கட்சியினரும் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையில் தொடர்ந்து மும்முறமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதனிடையே தமிழக வெற்றி கழகம் கட்சி மூலமாக விஜய் களத்தில் இறங்கியுள்ளதால் யாருடன் கூட்டணி அமைக்க போகிறார் என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாகவே உள்ளது. இந்நிலையில் கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனாரின் 89 ஆவது நினைவு நாளை முன்னிட்டு நெல்லையில் அவருடைய சிலைக்கு மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், SIR பணிக்கு எதிராக வருவாய்த்துறை அலுவலர்களை போராட்டத்திற்கு தூண்டிவிட்டது திமுக அரசுதான்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழக அரசு மத்திய அரசுக்கு எதிராகவே போராடி வருகிறது. SIR பணிகளுக்கு எதிராக வருவாய்த்துறை அலுவலர்களை தூண்டி விட்டது திமுக அரசுதான் என்று குற்றம் சாட்டியுள்ளார். சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, நடிகர் விஜய் பாஜக உடன் கூட்டணி அமைப்பார் என்று பேசியது குறித்த கேள்விக்கு, அவர்களுடைய ஆசை நிறைவேறட்டும் என்று பதிலளித்துள்ளார். மேலும் கூட்டணி குறித்த ஜனவரியில் பேசி முடிவு எடுக்கப்படும் என்றும் கூட்டணியால் மட்டும் ஆட்சியைப் பிடித்து விட முடியாது என்றும் தெரிவித்துள்ளார். திமுக அரசு தன் மக்களை விட தமிழக மக்களை விட தன் மக்களை முக்கியம் என்று உள்ளது. துணை முதல்வர் உதயநிதியை முதல்வர் ஆக்குவதற்காக திமுக முயற்சி செய்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.