சீட்டை மாற்ற மறுத்த பயணி… சரமாரியாக தாக்கிய பாஜக MLA… ஓடும் ரயிலில் நடந்த கொடூர சம்பவத்தின் வீடியோ வைரல்..!!

By Soundarya on ஆனி 23, 2025

Spread the love

டெல்லி – போபால் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் பயணியை, பாஜக MLA ராஜீவ் சிங்கின் ஆதரவாளர்கள் அடித்து உதைத்த வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருக்கைகளை மாற்ற மறுத்ததற்காக பாஜக எம்எல்ஏ ராஜீவ் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்களால் பயணி ஒருவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதாவது ரயிலில் சீட்டை மாற்றிக் கொள்ள அந்த பயணி சம்மதிக்காததால், MLAவும், அவருடன் பயணித்த அவருடைய ஆதரவாளர்களும், அவரை செருப்பு உட்பட பலவற்றை வைத்து சரமாரியாக தாக்கியுள்ளார்கள். இதில் அவருடைய மூக்கிலிருந்து ரத்தம் வழிகிறது. அவருடைய சட்டையிலும் ரத்தக்கறையாக உள்ளது.  இதனால் ரயிலில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.