தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து பாஜக மேலிடம் தனது வியூகத்தை மாற்றியுள்ளதாகத் தெரிகிறது. திமுகவின் பலமாக கருதப்படும் சிறுபான்மையினரின் வாக்குகளை விஜய் பிரிப்பார் என்றும், இது மறைமுகமாக பாஜகவின் வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்கும் என்றும் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் கருதுவதாகக் கூறப்படுகிறது.
விஜய் பாஜக கூட்டணிக்கு வர வேண்டிய அவசியம் இல்லை என்றாலும், அவரை நேரடியாக விமர்சிப்பது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால், பொதுக்கூட்டங்களிலோ அல்லது சமூக வலைதளங்களிலோ அவருக்கு எதிரான கருத்துக்களைப் பதிவிடுவதைத் தவிர்க்குமாறு நிர்வாகிகளுக்கு பியூஸ் கோயல் அறிவுறுத்தியுள்ளார், விஜய்யின் அரசியல் வருகை ஆளுங்கட்சியான திமுகவிற்கு நெருக்கடியைக் கொடுக்கும் என்பதால், அந்தச் சூழலை பாஜக தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிடுகிறது.
