“நான் உன்னை காதலிக்கிறேன்”.. கல்லூரி மாணவிக்கு தொல்லை கொடுத்த பாஜக பிரமுகர்… இறுதியில் நடந்த பயங்கர சம்பவம்…!

By Nanthini on புரட்டாதி 6, 2025

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதி பள்ளப்பட்டு அடுத்த அரவாசப்பட்டடை கிராமத்தை சேர்ந்த 20 வயதான ஹேமந்த் என்ற வாலிபர் அதே தொகுதியில் பாஜகவில் பொறுப்பில் உள்ளார். ஆர்கே வேட்டையை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் அருகில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் நிலையில் கல்லூரி பேருந்தில் சென்று வரும் மாணவியை ஹேமந்த் ஒருதலை பட்சமாக காதலித்து உள்ளார். மாணவி கல்லூரிக்கு செல்லும் போதும் வரும் போதும் அவரை பின்தொடர்ந்து ஹேமந்த் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணிடம் நான் உன்னை காதலிப்பதாக கூறி ஹேமந்த் சாக்லேட் வாங்கி கொடுத்துள்ளார். அதற்கு காதலை ஏற்க மறுத்த அந்த மாணவி தான் படிக்க வேண்டும் தன்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கூறியுள்ளார். ஆனால் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாத ஹேமந்த் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார். தன்னை காதலிக்கும்படி மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன அந்த மாணவி வீட்டில் பெற்றோரிடம் கூறினால் படிப்பை நிறுத்தி விடுவார்களோ என்று அச்சத்தில் வீட்டில் கூறாமல் இருந்துள்ளார்.

   

இந்நிலையில் நாளுக்கு நாள் ஹேமந்த் மாணவியை காதலிக்க சொல்லி தொடர்ந்து தொந்தரவு செய்ததால் தொந்தரவு தாங்க முடியாத அந்த மாணவி தனது கல்லூரி பேராசிரியர் இடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பேராசிரியர் மாணவி குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவித்த நிலையில் உடனே போலீஸ் இல் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்து போலீசார் பாஜக பிரமுகர் ஹேமந்த் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். கல்லூரி மாணவிக்கு தொல்லை கொடுத்ததில் பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.