தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான ஆயத்த பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர படுத்தியுள்ளன. தேர்தல் களத்தில் கட்சிகள் நேரடியாக செயல்பட தொடங்கும் முன்னரே கூட்டணி பேச்சு வார்த்தைகள் மற்றும் அரசியல் வியூகங்கள் மறைமுகமாக அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இதனிடையே அதிமுகவின் மூத்த தலைவரான செங்கோட்டையன் அண்மைக்கால அரசியல் நகர்வு உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. அரசியல் அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர், கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு மிக்க தலைவராக இருக்கும் செங்கோட்டையன் தற்போது சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.
பல வருடங்களாக அதிமுகவில் முக்கிய அங்கம் வகித்த இவர் அண்மையில் கட்சியின் தலைமைக்கு எதிராக செயல்பட்டதாக கூறி அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இவருடைய நீண்ட அரசியல் அனுபவத்தையும் கட்சிக்குள் இவருடைய பங்களிப்பையும் கருத்தில் கொண்டு இந்த நீக்கம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியது. கட்சியை விட்டு நீக்கப்பட்ட கையோடு செங்கோட்டையன் திடீரென்று டெல்லி பயணம் சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்தார்.
இந்த பரபரப்பான சந்திப்பு குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாத நிலையில் இது ஒரு உயர்மட்ட ரகசியமான சந்திப்பாக பார்க்கப்பட்டது. தேசிய அரசியலில் செல்வாக்கு மிக்க அமித்ஷாவுடன் மாநில அளவில் கட்சியை விட்டு நீக்கப்பட்ட ஒரு தலைவர் சந்திப்பு நடத்தியது செங்கோட்டையனின் அடுத்த கட்ட நகர்வு தேசிய தலைமையின் ஆலோசனையின் பேரில்தான் இருக்கும் என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியது.
இப்படியான நிலையில் அரசியல் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது எம்எல்ஏ பதவியை நேற்று ராஜினாமா செய்த நிலையில் இன்று விஜய் தலைமையிலான தமிழக விபத்து கழகம் கட்சியில் இணைய இருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் விஜய் செங்கோட்டையனுக்கு அரசியல் அனுபவத்திற்கு ஏற்ப முக்கிய பொறுப்பை வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அனுபவம் வாய்ந்த ஒரு தலைவர் புதிய கட்சிகள் இணைவது 2026 தேர்தலுக்கு தமிழக வெற்றி கழகம் கட்சியின் அடித்தளத்தை பலப்படுத்தும் என்று பார்க்கப்படுகிறது.
அதே சமயம் இது கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்துக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. தற்போது கட்சியின் முழு அதிகாரத்தையும் தன் வசம் வைத்திருக்கும் ஆனந்தியின் செயல்பாட்டில் செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவரின் வருகை புதிய அதிகார சமநிலையை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. இந்த ஒட்டுமொத்த அரசியல் நகர்வுக்கு பின்னால் தேசிய அளவில் வலுவான ஒரு வியூகம் இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது செங்கோட்டையன் மோடி மற்றும் அமித்ஷாவின் நம்பிக்கை கூறிய பாத்திரமானவர் என்பதால் பாஜகவின் தேசிய தலைமை கொடுத்த யோசனையின் பெயரில் அவர் விஜய் கட்சியில் இணைகிறார் என்ற தகவல் வருகிறது.
பாஜகவின் ஸ்கெட்ச் இதுதான் என்றும் முதலில் செங்கோட்டையனை விஜய் கட்சியில் இணைய சொல்லி அதன் பிறகு அவர் மூலமாக தமிழக வெற்றிக்கழகம் கட்சியை பாஜக தலைமையிலான கூட்டணியில் கொண்டு வருவதற்கு மறைமுக முயற்சி எடுக்கப்படுகின்றது என கூறப்படுகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் வலுவான கூட்டணிக்காக பாஜக இவ்வாறான மறைமுகமான மற்றும் அனுபவமிக்க தலைவர்களை பயன்படுத்தும் வியூகத்தை அமைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தானேவின் தலாவ் பாலி பகுதியில் பொது இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறி, சில பெண்களை சிவசேனா மகளிர் அணியினர்…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்திகள் அனுப்பி, இல்லம் சென்று தகராறு செய்ததாகத் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது…
ஆந்திரப் பிரதேசம் ஒரே நாளில் ரூ 5.35 லட்சம் கோடி மதிப்பிலான தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களை ஈர்த்துள்ளதாக முன்னாள் அமைச்சர்…
உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த ஷாசியா பர்வீன், அச்சமற்ற 'பெண் பாம்பு பிடிப்பவராக' அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். சிறுவயது முதலே…
பெங்களூருவில் ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர், பெண் பயணி ஒருவரிடம் தொலைபேசியில் பாலியல் ரீதியாக அத்துமீறிப் பேசிய சம்பவம்…
ஹைதராபாத் நாகோல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜைபுரி காலனியில் வசித்து வருபவர் சம்பங்கி சுரேஷ். இவரது மனைவி சுகுணா மற்றும்…