சொந்த ஊரில் 5 பூத்திலும் தோல்வி…. அண்ணாமலையை முதல்வராக்க துடிக்கும் செந்தில்… கதறும் பாஜக மேலிடம்…!

By Nanthini on புரட்டாதி 5, 2026

Spread the love

அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக இருந்த காலத்தில் இருந்து, தற்போது பாஜகவிலிருந்து விலகி ‘வீ தி லீடர்ஸ்’ (We The Leaders) என்ற அரசியல் அமைப்பைத் தொடங்கிச் செயல்பட்டு வருவது வரை தமிழக அரசியலில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி வருகிறார். அதிமுக கூட்டணியை எதிர்த்தது, பாஜக தலைவர் பதவியிலிருந்து மாற்றப்பட்டது எனப் பல அரசியல் நகர்வுகளுக்குப் பிறகு உருவான இந்த அமைப்பில், பாஜகவின் முன்னாள் நிர்வாகிகள் மற்றும் லட்சக்கணக்கான ஆதரவாளர்கள் இணைந்து வருகின்றனர். அத்துடன், நடிகர் விவேக்கின் மனைவி உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்திருப்பதும், “யாருக்கும் நிரந்தரப் பதவி இல்லை, புதியவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு” என்ற அவரது கொள்கை முடிவும் இளைஞர்கள் மற்றும் புதிய அரசியல் ஆர்வலர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இருப்பினும், அண்ணாமலையை தமிழக முதல்வராக்குவோம் என அவரது தீவிர ஆதரவாளர்கள் முழங்கி வருவது தற்போது புதிய அரசியல் காரசார விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது. குறிப்பாக, கணியாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த செந்தில் என்பவர் “அண்ணாமலையை முதல்வராக்காமல் ஓய மாட்டோம்” எனக் கூறியதற்கு பாஜகவினர் கடுமையாகப் பதிலடி கொடுத்து வருகின்றனர். சொந்த ஊரில் உள்ள 5 வாக்குச்சாவடிகளிலேயே அண்ணாமலையை வெற்றி பெற வைக்க முடியாத ஒருவர், அவரை எப்படி மாநிலத்தின் முதல்வராக்க முடியும் என்ற கேள்வியை முன்வைத்து பாஜகவினர் தங்களின் கடுமையான விமர்சனங்களை இணையத்திலும் ஊடகங்களிலும் பதிவு செய்து வருகின்றனர்.

   

கடந்த தேர்தலில் கணியாம்பூண்டி கிராமத்தின் பூத் எண்கள் 368 முதல் 372 வரையிலான 5 வாக்குச்சாவடிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் வேட்பாளர்களே அதிக வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்தனர். அவர்களுக்கு அடுத்தபடியாக திமுக இரண்டாம் இடத்தையும், பாஜக மூன்றாம் இடத்தையுமே கைப்பற்ற முடிந்தது. இப்படித் தனது சொந்தச் சிற்றூரிலேயே அண்ணாமலைக்குச் சாதகமான சூழலை உருவாக்கத் தவறிய செந்திலின் வார்த்தைகள், வெறும் அரசியல் வெற்று முழக்கமே தவிர யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டது என்பது பாஜகவினரின் பிரதான குற்றச்சாட்டாக உள்ளது.

   

அண்ணாமலை உடன் சென்றவர்களின் அரசியல் எதிர்காலம் கேள்விகுறியாகும் என பாஜகவினர் விமர்சித்த போதிலும், அண்ணாமலையின் ஆதரவாளர்கள் அதனைப் பொருட்படுத்தவில்லை. வரும் உள்ளாட்சித் தேர்தலில் முதற்கட்டமாகத் தங்கள் அமைப்பின் பலத்தைச் சோதித்துப் பார்க்க அண்ணாமலை திட்டமிட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரி என்ற நேர்மையான பிம்பம், போதைப்பொருள் ஒழிப்பு மாநாடுகள் மற்றும் மாற்றத்தை விரும்பும் இளைஞர்களின் ஆதரவு ஆகியவற்றைக் கொண்டு, செந்திலின் வார்த்தைகளைத் தவறென நிரூபித்து அண்ணாமலையை நிச்சயம் தமிழகத்தின் முதல்வராக்குவோம் என்ற நம்பிக்கையில் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து களப்பணியாற்றி வருகின்றனர்.