தமிழகத்தின் 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் தற்போது தேர்தல் களம் சூடி பிடிக்க தொடங்கிவிட்டது. ஒரு பக்கம் கூட்டணி பேச்சுவார்த்தை மறுபக்கம் உறுப்பினர் சேர்க்கை என தேர்தல் பணியில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. இதரிடையே வருகின்ற தேர்தலை பாஜக உடன் கூட்டணி அமைத்து எதிர்கொள்ள அதிமுக திட்டமிட்டுள்ள நிலையில் இபிஎஸ் இன் இந்த முடிவு பலரும் அதிருப்தி தெரிவித்த வண்ணம் உள்ளனர். இருந்தாலும் அதற்கெல்லாம் செவி சாய்க்காமல் இபிஎஸ் தேர்தல் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பை ஜெயந்த் பாண்டா, இணை பொறுப்பாளர் முரளிதர் ஆகியோர் இன்று காலை சென்னையில் பசுமை வழிச்சாலை இல்லத்தில் இபிஎஸ்ஐ சந்திக்க உள்ளனர். இந்த சந்திப்பின்போது கூட்டணியை வலுப்படுத்த ஆலோசிக்கப்படுகிறது. குறிப்பாக கரூர் துயர விவகாரத்தில் விஜய் முடங்கி இருப்பதால் அவருடன் கூட்டணி செல்ல காத்திருந்த சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சை தொடங்குவது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது. விஜயின் இந்த சூழலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி பாஜக தொடர்ந்து வியூகங்களை வகுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…