தமிழகத்தில் அடுத்த வருடம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கு பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. அதேசமயம் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் முயற்சியிலும் டெல்லி தலைமை தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய்யை தங்கள் கட்சியில் இணைக்கும் முயற்சி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.
குறிப்பாக இபிஎஸ் தொடர்ந்து விஜய் இடம் பேச்சுவார்த்தை நடத்திவரும் நிலையில் சமீபத்தில் கூட கூட்டணிக்கு பிள்ளையார் சூழலில் போடப்பட்டு விட்டதாக சூசகமாக தெரிவித்திருந்தார். ஆனால் சமீபத்தில் தமிழக வெற்றிக்கழகம் நடத்திய பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் விஜய் தான் என அறிவிக்கப்பட்டு விட்டது. இதனால் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்பது ஏறத்தாழ உறுதியாகி உள்ளது. இருந்தாலும் விஜய்யை விடுவதற்கு பாஜக தயாராக இல்லை என தெரிகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் கோவில்கள் இருக்கும் தொகுதிகளை பாஜக கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியதன்படி, காஞ்சிபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர், பழனி, ஸ்ரீரங்கம், மதுரை, திருவாரூர், கும்பகோணம் உள்ளிட்ட தொகுதிகளை பாஜக கேட்டதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே அங்கு அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடலாம் என தயாராகி வரும் நிலையில் புகழ்பெற்ற கோவில்கள் இருக்கும் தொகுதிகளை பாஜக கேட்பது இபிஎஸ்ஐ அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.
