“எனக்கு இந்த பிள்ளையே வேண்டாம்”… பிறந்து 3 நாட்களே ஆன ஆண் குழந்தையை கழுத்தை நெரித்து கொடூரமாகக் கொன்ற தாய்… வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!

By Nanthini on கார்த்திகை 9, 2025

Spread the love

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் குத்தி தேவி (40) என்ற கர்ப்பிணிக்கு கடந்த வியாழக்கிழமை இரவு பிரசவம் ஏற்பட்ட நிலையில் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை மற்றும் தாய் இருவரும் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர். இதனிடையே வார்டில் இருந்த மற்ற அனைவரும் தூங்கியதும் தேவி குழந்தையின் கழுத்தை துணியால் சுற்றி மூச்சு திணற செய்து கொடூரமாக கொலை செய்துள்ளார். நேற்று காலை தேவியின் மூத்த சகோதரி மைனா தேவி குழந்தையை பார்த்தபோது அசைவில்லாமல் இருந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கழுத்தில் காயங்களும் இருந்தன. உடனே பதறிய அவர் உடனடியாக மருத்துவர்கள் இடம் சென்று விவரங்களை கூறியுள்ளார். அவர்கள் வந்து பார்த்தபோது குழந்தை இறந்தது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து மருத்துவமனை தரப்பில் அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. அதாவது புதிதாக பிறந்த குழந்தையை தாய் தேவியே கொலை செய்தது தெரியவந்தது. அவருடைய கணவர் படுத்த படுக்கையாக இருக்கும் நிலையில் ஏற்கனவே நான்கு குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் ஐந்தாவது பிறந்த குழந்தையை வளர்க்க போதிய வசதி இல்லாதது மற்றும் மன அழுத்தம் ஆகிய காரணங்களால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் அவரை கைது செய்த விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.