தவெக தலைவர் விஜய்யின் மதுரை மாநாடு குறித்து தமிழ்நாடு பாஜக-வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார். “முதலமைச்சரை Uncle என மேடையில் விஜய் சொல்லலாமா? திமுக-வினர் விஜயை Boomer என்று சொன்னால் அவர் மனது புண்படும்தானே? தாய்மாமன் என்ற வார்த்தையெல்லாம் யோசித்து பயன்படுத்த வேண்டும்.
தாய்மாமன் என்ற வார்த்தையெல்லாம் யோசித்து பயன்படுத்த வேண்டும். எல்லாருக்கும் விஜய் தாய்மாமன் என்றால் 50 ஆண்டுகளாக எங்கே சென்றார்? எத்தனை மருமக்களுக்கு சீர் கொடுத்தார்? தாய்மாமா தான் நடித்த படங்களுக்கு இலவசமாக டிக்கெட் கொடுக்கிறாரா? என்று ஆவேசமாக பேசியுள்ளார்.
