தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளது. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே சமீபத்தில் கரூரில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தமிழக முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வந்தாலும் ஒரு சிலர் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள்.
அதன்படி கரூர் விவகாரத்தில் அண்ணாமலை விஜய்க்கு சாதகமாக பேசி இருந்தார். இதனை தொடர்ந்து அண்ணாமலையை பலரும் விமர்சித்து வந்த நிலையில், சும்மா நொச்சு நொச்சுன்னு எங்ககிட்டயே கேக்குறீங்க, போய் விஜய்கிட்ட கேளுங்க, தமிழக வெற்றி கழகம் கட்சிக்காரங்க கிட்ட கேளுங்க என்று அண்ணாமலை கடுகடுத்துள்ளார். பாஜகவின் A டீம் தான் திமுக என சீமான் கூறியது குறித்த கேள்விக்கு இவ்வாறு அண்ணாமலை பதிலளித்துள்ளார். தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு பாஜக என்ன மார்க்கெட்டிங் ஆபிஸரா என்றும் அவர் கோபமாக கேள்வி எழுப்பினார். கரூர் சம்பவம் குறித்து கருத்துக்கள் ஏற்கனவே சொல்லியாச்சு என்று கூறியுள்ளார்.
