இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. எல்லா வேலைகளுமே இன்று தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக எளிதாகிவிட்டது. குறிப்பாக நாம் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஏராளமான அப்டேட்டுகள் தினம் தோறும் வந்து கொண்டிருக்கின்றன.
இப்படியான நிலையில் ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ ஜாக் டோர்ஸி, BitChat என்ற புதிய மெசேஜிங் செயலியை உருவாக்கியுள்ளார். இதற்கு இன்டர்நெட், போன் நம்பர் அல்லது சர்வர் எதுவும் தேவையில்லை. ப்ளூடூத் மூலம் peer to peer முறையில் இந்த ஆப்பில் மெசேஜ் அனுப்பலாம். தற்போது இது டெஸ்டிங்கில் உள்ளது. தனி உரிமை பாதுகாப்பு மற்றும் off grid communication நோக்கில் பிட் சாட்டை உருவாக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
