10 வருஷமா குழந்தை பாக்கியம் இல்லை.. மந்திரவாதியை நாடிய பெண்.. இறுதியில் நடந்த பகீர் கிளப்பும் சம்பவம்..!

By Nanthini on ஆடி 8, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இன்று எல்லாமே டிஜிட்டல் மயமாகிவிட்ட நிலையில் ஒரு சில கிராமங்களில் மக்கள் இன்னும் மூடநம்பிக்கைகளை பின்பற்றி வருகிறார்கள். இதனால் ஏற்படும் ஆபத்துகளும் அதிகம். அதன்படி உத்திரபிரதேசம் மாநிலத்தில் 10 வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த அனுராதா (35) என்ற பெண் தாந்தரீகம் செய்யும் சந்துவின் உதவியை நாடியுள்ளார்.

அவரோ அனுராதாவுக்கு பேய் ஓட்ட வேண்டும் என்று கூறி உதவியாளர்களுடன் சேர்ந்து அவரது கழுத்தை அழுத்தி வலுக்கட்டாயமாக வாயைத் திறந்து கழிவு நீரை குடிக்க வைத்துள்ளார். இதில் உடல்நல மோசம் அடைந்த அனுராதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இன்னும் இது போன்ற மூடநம்பிக்கையில் பலர் சிக்கி இருப்பது வருத்தம் அளிக்கிறது.