Categories: சினிமா

அவரை நம்பாதீங்க… நம்பினால் அது தான் நடக்கும்… சூர்யாவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பிரபலம்..!

Spread the love

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்டோர் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் கங்குவா. இந்த திரைப்படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருந்த நிலையில் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படத்தின் சண்டைக் காட்சிகளை சுப்ரீம் சுந்தர் மாஸ்டர் இயக்கியுள்ள நிலையில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

இதனைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பாக படம் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் படத்தின் ப்ரோமோசனை ஒரு மாதத்திற்கு முன்னர் இருந்து படக்குழு தொடங்கிவிட்டது. அது மட்டுமல்லாமல் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா படம் குறித்து தான் எங்கு பேசினாலும் பெரும் நம்பிக்கையோடு பேசி வந்தார். இதனை பலரும் ஓவர் பில்டப்பாக பார்த்த நிலையில் படம் 2000 கோடிகளை அசால்டாக வசூல் செய்யும் என்றும் படம் ஹாலிவுட் தரத்திற்கு உள்ளது எனவும் கூறினார்கள்.

பாலிவுட்டில் இந்த படத்தை மிகவும் கவனமாக கண்காணித்து வருகிறார்கள். சூர்யா இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் இந்த திரைப்படம் தான் உருவாகியுள்ளது என ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் தொடர்ந்து படத்திற்கு பில்டப் கொடுத்து வந்தனர். சென்னை தொடங்கி மலேசியா வரை படத்தின் ப்ரோமோஷன் நடைபெற்றது. இப்படியான நிலையில் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. சூர்யா கொடுத்த பில்டப்பை நம்பி படத்தை பார்க்க சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது என்று புலம்புகிறார்கள் அவருடைய ரசிகர்கள்.

#image_title

பலரும் படம் குறித்து விமர்சனம் செய்த நிலையில் கங்குவா திரைப்படம் சுமார் 350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. படம் முதல் நாள் 58 கோடி ரூபாய் தான் வசூல் செய்தது. இப்படி வசூல் சுமாராக தான் இதுவரை போய்க்கொண்டிருக்கிறது. இந்நிலையில் கங்குவா குறித்து பேசிய வலைப்பேச்சு பிஸ்மி, சூர்யா, ஒரு நடிகரின் பயணத்தில் ஏற்ற தாழ்வுகள் இயல்பானது. தனஞ்செயனை நம்பாதீங்க. நம்பிவிட்டால் கங்குவா 2 வில் கூட நீங்க வாய்ப்பிருக்கு. இது உங்க திரையுலக வாழ்க்கையை முழுவதுமாக முடிக்கக்கூடும். நடிகர்களுக்கு அருகில் பல ஜால்ராக்கள் இருக்கிறார்கள். கவனமாக இருங்கள் என்று கூறியுள்ளார்.

Soundarya

Recent Posts

BREAKING: டாஸ்மாக் துறையில் ரூ.36,00,00,00,000 ஊழல்… அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றசாட்டு…!!!

டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…

7 மணத்தியாலங்கள் ago

பெற்ற தாயைக் கத்தியால் குத்திவிட்டு 5-வது மாடியிலிருந்து குதித்த மகன்..! நொய்டாவை உலுக்கிய பயங்கரம்.. நடந்தது என்ன..? நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…

7 மணத்தியாலங்கள் ago

ஏழை சிறுமிகளுக்கு வலைவீசி மும்பைக்கு விற்பனை.. கொடூர மனிதக் கடத்தல் கும்பல் ராஜஸ்தானில் கைது.. 10 மைனர் பெண்கள் மீட்பு..!!

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…

7 மணத்தியாலங்கள் ago

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

7 மணத்தியாலங்கள் ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

7 மணத்தியாலங்கள் ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

7 மணத்தியாலங்கள் ago