#image_title
தமிழ் சினிமாவில் இன்றிருக்கும் நம்பிக்கைக்குரிய இயக்குனர்களில் முதன்மையானவராக இருக்கிறார் வெற்றிமாறன். பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் மற்றும் விடுதலை என குறைவான படங்களையே அவர் இயக்கி இருந்தாலும் அந்த படங்களின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது.
முன்னணி நடிகர்களை வைத்து கதையில் சமாதானங்கள் இல்லாமல் அவர் எடுக்கும் படங்கள் கமர்ஷியலாகவும் வெற்றி பெறுகின்றன. இதனால் அவர் இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் ஆசைப்படுகிறார்கள். தற்போது விடுதலை -2 படத்தை இயக்கி வரும் வெற்றிமாறன் அடுத்து சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்கவுள்ளார்.
இந்நிலையில் இப்போது அவர் நான்கு ஆண்டுகளாக உருவாக்கி வரும் விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் டிசம்பர் 20 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதையொட்டி நேற்று படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. ஆனால் டிரைலரில் இடம்பெற்றுள்ள ஒரு வசனம் சர்ச்சையை உருவாக்கிக் கவனம் பெற்றுள்ளது.
டிரைலரில் ஒரு இடத்தில் விஜய் சேதுபதி பேசுவது போல ‘தத்துவம் இல்லாத தலைவர்கள் வெறும் ரசிகர்களைதான் உருவாக்குவார்கள். அவர்களால் எந்த முன்னேற்றமும் இருக்காது” என்ற வசனம் வைக்கப்பட்டுள்ளது. இந்த வசனம் தற்போது கட்சி ஆரம்பித்துள்ள விஜய்யைத் தாக்குவது போல உள்ளது என ஒரு சாரார் கருத்து தெரிவித்து விஜய்யைத் தத்துவம் இல்லாத தலைவர் எனக் கூறி வருகின்றனர்.
ஆனால் இன்னொரு தரப்போ விடுதலை 2 படத்தின் கதை நடக்கும் காலம் 1980 களில் எம் ஜி ஆர் ஆட்சி காலம் என்பதால் அவர் மீதான விமர்சனம் என மற்றொரு சாராரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருவருமே நடிகர்களாக இருந்து அரசியல் கட்சி ஆரம்பித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த வசனத்தின் மூலம் வெற்றிமாறன் யாரைத் தாக்குகிறார் என்ற விவாதம் சமூகவலைதளங்களில் இப்போது நடந்து வருகிறது.
கொச்சி கடவந்தரா காவல் நிலையத்தில் 2025-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒழுக்கக்கேடான மனித கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியாக அக்பர்…
சுள்ளியாவின் ஸ்ரீராமப்பேட்டையில் உள்ள சாலையோரக் குடிநீர் திட்டப் பணிகளின் போது, திறந்தவெளி சாக்கடையில் சிறுவன் ஒருவன் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர்…
தெருவில் தனது பேரக் குழந்தையை கைகளில் ஏந்தியவாறு நடந்து சென்ற முதியவர் ஒருவரை, அங்கு நின்றுகொண்டிருந்த வெறி கொண்ட காளை…
பகலூர் சாலையில் உள்ள அமேசான் அலுவலகப் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த எதிர்பாராத வெடிவிபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது…
மதுரை அரசு மருத்துவமனையில் காயமடைந்த தனது நண்பனுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கக் கோரி இளைஞர் ஒருவர் கடும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.…
பெண்களுக்கான முக்கியத்துவமும் உரிமைகளும் பெண்களை மேன்மைப் படுத்துவதற்காகத்தானே தவிர, மற்றவர்களை வன்முறையால் ஒடுக்குவதற்காக அல்ல. பொதுவெளியில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள்,…