Categories: சினிமா

பாலச்சந்தர் படத்தில் விவேக் இவ்வளவு வேலைகள் பார்த்துள்ளாரா?… பல வருடங்களுக்குப் பிறகு பகிர்ந்த ரகசியம்!

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களுள் ஒருவராக இருந்தவர் சின்ன கலைவாணர் விவேக் அவர்கள். 30 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் சினிமாவில் பல்வேறு வகையான நகைச்சுவைப் பாத்திரங்களை இவர் ஏற்று நடித்துள்ளார். தனது நகைச்சுவைகளில் சமூக சிந்தனைகளையும் கலந்து பேசக்கூடியவர். அதனால் சின்னக் கலைவாணர் என்ற பட்டத்தையும் பெற்றார்.

பல சிந்தனையான நகைச்சுவையால் மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் தனக்கென தனி ஒரு இடத்தை இன்றளவும் வைத்திருப்பவர். சினிமா தாண்டியும் பல நற்காரியங்களை செய்தவர் விவேக். முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் தீவிர ரசிகனான விவேக் அவரின் கொ ள்கைகளை பின்பற்றுவதோடு அதன் வழியில் நடந்தும் உள்ளார்.

கிரீன் கலாம் எனும் பெயரில் பல லட்சம் மரங்களை நட்டத்தோடு அதை பராமரித்தும் வந்துள்ளார். மேலும் திரையுலகில் நடிகராக மட்டுமில்லாமல் நிஜ வாழ்க்கையில் பல சமுதாய சீர்திருத்த பணிகளை செய்துள்ளார்.  இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் இதய முடக்கம் காரணமாக காலமானார். அவரின் இந்த திடீர் மரணம் அவரது ரசிகர்களால் இன்றளவும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது.

விவேக்கை ஒரு நடிகராக தமிழ் சினிமாவுக்கு அழைத்து வந்தவர் இயக்குனர் கே பாலச்சந்தர்.அவர் இயக்கிய மனதில் உறுதி வேண்டும் என்ற படத்தில் கதாநாயகி சுஹாசினியின் தம்பியாக நடித்திருப்பார். அந்த படத்தில் தனக்கு எப்படி நடிக்க வாய்ப்புக் கிடைத்தது என்பது பற்றி அவர் பேசியுள்ளார்.

அதில் “ஒரு நாள் பாலச்சந்தர் சார் என்னை அழைத்து ‘மனதில் உறுதி வேண்டும்’ படக் கதையை சொல்லி அதில் கதாநாயகியின் குடும்பத்தில் யார்யாரெல்லாம் இருக்கலாம் என்பது குறித்து சில காட்சிகள் எழுதி எடுத்துவர சொன்னார். நான் அதுபற்றி சில கதாபாத்திரங்களையும் காட்சிகளையும் எழுதி வந்தேன். அதில் ஒரு தம்பி கதாபாத்திரம் இருந்தது. அந்தக் கதாபாத்திரத்தில் என்னையே நடிக்க சொன்னார். அப்படிதான் நான் அந்த படத்தில் வந்தேன்” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

BREAKING: கனிமவளங்கள் கடத்தல்.. முதல்வர் விஜய்யின் அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…

8 minutes ago

பறவையே உஷார்… “இது வாலு இல்ல, மரண வில்லன்” – நெட்டிசன்களை அதிரவைத்த வைரல் வீடியோ… அம்மாடியோ பயங்கரமா இருக்கே..!!

ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…

10 minutes ago

இரத்தக் கடலாக மாறிய கடற்கரை.. பாரம்பரியம் என்ற பெயரில் 700 திமிங்கிலங்கள், டால்பின்கள் கொடூர வேட்டை… உலகையே உலுக்கிய கொடூரம்..!!

ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…

14 minutes ago

“இனி இப்படித்தான்” வங்கிகளில் கோல்டு லோன்… RBI வங்கியின் அதிரடி அறிவிப்பு..!

வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…

16 minutes ago

பாவம்..! நடுரோட்டுல அனாதையா நிக்குறாரு விஜயபாஸ்கர்..எங்கே போறதுன்னு தெரியாம… திமுக அமைச்சர் ரகுபதி உருக்கம்..!!

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…

29 minutes ago

டிவி சேனல் தொடங்கும் முதல்வர் விஜய்… நிதி மற்றும் நிர்வாகப் பொறுப்பில் ஆதவ் அர்ஜுனா..!!

தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…

32 minutes ago