நடுவானில் விமானத்தின் குறுக்கே வந்த பறவை… அடுத்து நடந்த சம்பவம்.. அலறி துடித்த பயணிகளின் அதிர்ச்சியூட்டும் வீடியோ…!

By Divyamayakannan on ஆவணி 7, 2025

Spread the love

ஸ்பெயினின் மாட்ரிட் விமான நிலையத்திலிருந்து பாரிஸ் நோக்கி பறந்த Iberia Airbus A321- 253 NY பயணிகள் விமானம் IB 579 புறப்பட்டு 20வது நிமிடத்தில் தரையிறங்கப்பட்டது. இது தொடர்பான விமானத்தின் மூக்கில் பறவை ஒன்று மோதியதில் விமானம் சேதமடைந்து திடீர் குழப்பம் ஏற்பட்டதால் பயணிகள் பதற்றத்துடன் இருப்பது நன்றாகவே வீடியோக்களில்  தெரிகிறது. அந்த வீடியோவை விமானத்தில் பயணித்த ஜியான்கார்லோ சாண்டோவல் என்பவர் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோ காட்சியில் புகை சூழ்ந்த பதற்றமான சூழ்நிலை காரணமாகவே ஆக்சிஜன் மாஸ்க்களை பயணிகள் அணிவதை பார்க்க முடிகிறது. ஏதோ காற்றழுத்த தாழ்வு தான் என்று நினைத்தோம் போகப் போக சத்தம் கேட்கத் தொடங்கியது. ஏதோ நடக்கப் போகிறது என்று பயந்தோம் பதறினோம் என்றும் விமானத்தில் பயணித்த பயணிகள் தெரிவித்துள்ளனர். இறுதியாக விமானத்தை ஓட்டிய விமானிகள் சூதானமாக விமானத்தை தரை இறக்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். நூற்றுக்கணக்கான உயிரை காப்பாற்றிய  விமானிகளுக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன.