உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஒரு மேம்பாலத்தில், வேகமாகச் சென்ற வாகனங்களுக்கு இடையே சிக்கித் தவித்த பசு மாட்டை, இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் தன் உயிரைப் பணையம் வைத்து பாதுகாப்பாக மீட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘ஸ்ரீ சுத்’ என்பவரால் படம்பிடிக்கப்பட்டு இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், அந்த நபர் தனது பைக்குடன் பசுவின் அருகிலேயே மெதுவாகச் சென்று அதைச் சாதுரியமாக வழிநடத்துவது பதிவாகியுள்ளது.
மேம்பாலத்தில் வாகனங்கள் அதிவேகத்தில் சென்று கொண்டிருந்த போதிலும், அந்தப் பைக்கர் சற்றும் தயங்காமல் மாட்டின் பக்கவாட்டில் சென்று அதனைச் சாலையின் ஓரத்திற்குத் தள்ளிக்கொண்டு வந்தார். எந்தவொரு பாராட்டும் அல்லது விளம்பரமும் எதிர்பார்க்காமல், மாடு ஆபத்தான பாதையிலிருந்து முழுமையாக விலகும் வரை அவர் அதனுடனேயே சென்று பாதுகாப்பாக வழிநடத்தினார்.
https://www.instagram.com/reel/DZPBXJUx893/?utm_source=ig_web_button_share_sheet
சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த வீடியோவைக் கண்ட பயனர்கள் பலரும் அந்த பைக்கரின் நெகிழ்ச்சியான செயலைப் பாராட்டி வருகின்றனர். கடும் போக்குவரத்துக்கு மத்தியிலும் ஒரு வாயில்லா ஜீவனைக் காப்பாற்ற முன்வந்த அவரது மனிதநேயத்தைப் பலரும் புகழ்ந்துள்ளதோடு, ஆபத்தான நேரத்தில் உதவிய அவருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
