“திடீர் திருப்பம்…. ஆட்சிக்கு ஆபத்தா?”…. பின்னணியில் நடக்கும் ரகசிய பேச்சுவார்த்தை…. காலையிலேயே ஷாக் நியூஸ்….!

By Nanthini on ஆவணி 24, 2026

Spread the love

தமிழக அரசியலில் கூட்டணிகளுக்குள் உராய்வுகளும் தலைவர்களுக்கிடையேயான விமர்சனங்களும் இயல்பான ஒன்றே என்றாலும், தேர்தல் நெருங்கும் வேளையில் வெளியாகும் இத்தகைய கருத்துகள் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்துகின்றன. அமைச்சர் செங்கோட்டையனின் விமர்சனம், கூட்டணிக் கட்சிகளின் அதிருப்தி மற்றும் விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் பேச்சுகள் ஆகியவை தற்போதைய அரசியல் சூழலில் விவாதப் பொருளாக மாறியுள்ளன.

அமைச்சர் செங்கோட்டையன் வைக்கோவை விமர்சித்துப் பேசியதும், தவெக அரசு அமைவது குறித்த அமைச்சர்களின் பேச்சுகளால் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி (CPI, CPM) கட்சிகளிடையே எழுந்துள்ளதாகக் கூறப்படும் அதிருப்திகளும் அரசியல் களம் சூடுபிடித்துள்ளதைக் காட்டுகின்றன. மதிமுகவை போல அதிமுக மாறும் எனவும், தொண்டர்கள் இன்றி தலைவர்கள் மட்டுமே இருப்பார்கள் என்றும் வைகோவை, அமைச்சர் செங்கோட்டையன் சீண்டியுள்ளார். ஏற்கெனவே, தவெக அரசு அமைய ஆதரவு அளித்த CPI, CPM அதிருப்தியில் உள்ளது. அத்துடன் CM விஜய் நாளை PM ஆவார் என அமைச்சர்கள் பேசி வருவதால் காங்கிரஸும் கடுப்பில் உள்ளது. இதனால், ஆட்சிக்கு ஆபத்து வரலாம் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்