சீனாவைச் சேர்ந்த ZX Moto வாகனத் தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனர் ஷாங் ஷு, தண்ணீரில் இருசக்கர வாகனத்தை ஓட்டி புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள மாயங் மியா பகுதியில் இந்தச் சாதனை முயற்சி நடத்தப்பட்டது. இதில், சிறப்பு வசதிகளுடன் மறுவடிவமைக்கப்பட்ட இருசக்கர வாகனத்தைப் பயன்படுத்தி அவர் தண்ணீரில் 40.74 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து அசத்தியுள்ளார்.
இதன் மூலம், திறந்தவெளி வாகனத்தில் தண்ணீரில் அதிக தூரம் பயணித்தவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதற்கு முன்பு தண்ணீரில் 31 கிலோமீட்டர் தூரம் பயணித்ததே கின்னஸ் சாதனையாக இருந்தது. இந்த பழைய சாதனையை முறியடிக்க ஷாங் ஷு சுமார் 17 ஆண்டுகளாகத் தொடர்ந்து முயற்சி செய்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீண்டகால உழைப்பிற்குப் பிறகு ஷாங் ஷு படைத்துள்ள இந்த சாதனை, வாகனத் தொழில்நுட்ப ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. தண்ணீரில் இருசக்கர வாகனத்தை இயக்கி இவ்வளவு நீண்ட தூரத்தைக் கடந்தது, வாகனப் பொறியியல் துறையில் ஒரு முக்கியமான சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
