விஜய் டிவியின் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 தற்போது 82 நாட்களை பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த வாரம் Freeze டாஸ்க் என்பதால் போட்டியாளர்களின் வீட்டில் இருந்து அனைவரும் வந்திருந்தார்கள். இந்த வாரம் குடும்பத்தினர் வாரம் என்பதால் மிகவும் எமோஷனலாகவே சென்றது. அது மட்டுமல்லாமல் நேற்றைய எபிசோடில் யாரும் எதிர்பாரா விதமாக போட்டியாளர்களின் நண்பர்கள் உள்ளே வந்திருந்தார்கள். மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.

இதுவரை பிக் பாஸ் சீசனில் நடைபெறாத ஒரு நிகழ்வு நடந்தது. அதாவது நேற்று சௌந்தர்யா விஷ்ணுவிற்கு ப்ரபோஸ் செய்த காட்சி நடைபெற்றது. இது பார்ப்பதற்கு மிகவும் க்யூட்டாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் அருணின் காதலியான அர்ச்சனா உள்ளே வந்திருந்தார். இவர் கடந்த சீசனின் வெற்றியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய எபிசோடு பார்க்கும்போது பிக் பாஸ் காதல் ஜோடிகளின் களமாக மாறிவிட்டது போல் தெரிந்தது. நேற்று வார இறுதி விஜய் சேதுபதி எபிசோடு என்பதால் பல எதிர்பார்ப்புகள் இருந்தது. இந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்று தகவல் வெளிவந்த நிலையில் விஜய் சேதுபதி Eviction கார்டோடு வந்து ஒருவரை எவிக்ட் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்று கூறினார். இதனை தொடர்ந்து போட்டியாளர் ஜெஃப்ரி வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

இப்படியான நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது போட்டியாளர் தர்ஷிகாவிடம் விஷால் காதல் என்ற பெயரில் கேம் விளையாடினார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு நடந்தது எல்லாமே ஒரு நாடகம் என்று புரிந்து கொண்ட தர்ஷிகா, அந்த வீட்டிலேயே என்கிட்ட நடித்த சிறந்த நடிகர் விஷால் தான் எனவும் என்னை பாசத்தை காட்டி அடித்து விட்டார்கள் எனவும் கூறி இருந்தார். அது மட்டுமல்லாமல் விஷால் என்னை மொக்க மூஞ்சி என்று சொன்னது எல்லாம் நான் வெளியில் வந்து தான் பார்த்தேன். அதே விஷால் நான் வீட்டுக்குள் இருக்கும்போது அழகாக இருக்கேனு பலமுறை சொன்னார். என் முகத்திற்கு முன்னால் ஒன்று சொல்லி எனக்கு பின்னால் நிறைய பேசியுள்ளார். எது உண்மை என்று எனக்கு தெரியல என்று வருத்தத்துடன் பேசி இருந்தார்.
)
இப்படியான நிலையில் தர்ஷிகா வீட்டை விட்டு வெளியேறியதும் தற்போது விஷால் அன்ஷிதாவிடம் தன்னுடைய காதல் கேமை தொடங்கியுள்ளார். அதாவது நேற்று கார்டன் ஏரியாவில் அன்சிதாவின் தோள்மேல் கை போட்டுக்கொண்டு விஷால், நாளைக்கு ஒருவேளை நான் வெளியில போய்ட்டா கூட நீ என்ன மறந்துராத. நல்லா கேம் விளையாடிட்டு வெளியே வா உனக்காக நான் காத்துட்டு இருக்கேன் என்று கூறினார். வெளிப்படையாக தனது காதலை அவர் வெளிப்படுத்தாமல் மறைமுகமாகவே அன்சிதாவிடம் பேசிக் கொண்டிருந்தார். இதனைப் பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் இதெல்லாம் ஒரு பொழப்பா என்று கேட்கும் அளவுக்கு விஷால் நடந்து கொண்டுள்ளார். அது தொடர்பான வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
#VJVishal is the biggest 🚩flag for all girls
Degraded #Soundarya and now escaping
Utilized #Tharshika with fake “paasam”
Now talking same trash with #AnshidaKadika vanthalum sari,Ithuthaan unmai#BiggBossTamil8 #BiggBoss8Tamil #BiggBossSeason8Tamil
— CIMENA (@Cimena_atl) December 28, 2024
