விஜய் டிவியின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தொடங்கி ஒரு வாரம் முடிவடைந்துள்ள நிலையில் இரண்டு விதமான தாக்கம் நிகழ்ச்சியில் ஏற்படுத்தியுள்ளது. அதனால் பிக் பாஸ் வீட்டில் மட்டும் பரபரப்பு இல்லாமல் ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் சேர்த்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரையில் எப்போதுமே பொதுமக்கள் ஓட்டு தான் வெற்றியாளர்களை தீர்மானித்து வருகின்றது. அதேசமயம் போட்டியாளர்களை வெளியேற்றும் வருகிறது. ஆனால் இந்த முறை முதல் போட்டியாளராக வெளியேற்றப்பட்ட சாச்சனா வெளியேற்றத்தை பிக் பாஸ் தீர்மானித்து விட்டது மிகப்பெரிய மைனஸ் ஆக பார்க்கப்பட்டது.
பிறகு அடுத்த இரண்டு நாட்களில் அவர் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார். இந்த எலிமினேஷன் எந்த அளவுக்கு பரபரப்பாக பேசப்பட்டதோ அதே அளவுக்கு பரபரப்பை ரவீந்தரின் எலிமினேஷனும் முன்வைக்கப்பட்டது. வழக்கமாக முதல் வாரமே யாருமே எலிமினேட் செய்யப்பட்டதாக பிக் பாஸ் வரலாற்றில் கிடையாது. ஆனால் இந்த முறை ரவிந்தர் வெளியேற்றப்பட்டுள்ளார். அவருடைய ஆட்டம் பலருக்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி சலசலப்பை உண்டாக்கியது ஒரு காரணமாக அமைந்துவிட்டது என்றாலும் அவரின் உடல் நிலையும் காரணமாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், தர்ஷா குப்தா கதறி அழுகின்றார். இந்த வாரம் பெண்கள் சமைக்க வேண்டும் என்று ஆண்கள் டீம் கூறியுள்ள நிலையில் தர்ஷா குப்தா சமைத்த சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு எனக்கு வாந்தி வயித்தால போகுது என்று ஆண் போட்டியாளர்கள் சொல்லியுள்ளனர். நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற இங்கு வந்துள்ளேன் இவங்க என்னுடைய சமையலை இப்படி சொன்னா வெளியிலிருந்து பார்க்கிற மக்கள் என்ன என்ன நினைப்பாங்க என்று கூறிக்கொண்டு தர்ஷா குப்தா அழுகிறார்.