பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. ரவீந்தர் சந்திரசேகர், சாட்சனா நமிதாஸ், தீபக், தர்ஷா குப்தா, சத்யா, கானா ஜெஃப்ரி, சுனிதா, ஆர் ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, அன்சிகா, தர்ஷிகா, அருண் பிரசாத், விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அர்ணவ் ஆகியோர் போட்டியாளராக பங்கேற்றுள்ளனர்.

இந்த முறை சரிசமமாக ஒன்பது பெண் போட்டியாளர்களும் 9 ஆண் போட்டியாளர்களும் வந்துள்ளனர். இந்த நிலையில் யாரும் எதிர்ப்பாராத நேரத்தில் மீண்டும் சச்சனா பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்துள்ளார். அவரை பார்த்த போட்டியாளர்கள் ஷாக்காகி விட்டனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரவீந்தர் செய்யப்பட்டார். தினமும் பிக் பாஸ் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளியானது. அதில் போட்டியாளர்களுக்கு பலவிதமான டாஸ்க் வைக்கப்படுகிறது. ஒரு டாஸ்க்கில் வெற்றி பெற்றால் நாமினேஷன் ஃப்ரீ கிடைக்கும் என பிக் பாஸ் கூறியுள்ளார். இதனால் போட்டியாளர்கள் போட்டி போட்டு விளையாடுகின்றனர். இனிவரும் எபிசோடு மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
