Connect with us

CINEMA

நான் நரி-னா நீ அமுல் பேபி… தினேஷுக்கும் விஷ்ணுவிற்கும் இடையே வெடித்த சண்டை.. சூடுபிடிக்கும் பிக் பாஸ் வீடு..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி பிக் பாஸ் .வெற்றிகரமாக 6 சீசன்களை கடந்த இந்நிகழ்ச்சியின் 7வது சீசன் தற்பொழுது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டனர். அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியானது தற்போது வரை 46 நாட்களை நிறைவு செய்துள்ளது. இதுவரை இந்நிகழ்ச்சியை விட்டு 8 போட்டியாளர்கள் தற்பொழுது வரை வெளியேறி உள்ளனர்.

 

   

5 வைல்ட் கார்டு போட்டியாளர்களும் பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்துள்ளனர். இவர்களில் ரசிகர்களின் மனதை மிகவும் கவர்ந்தவர் போட்டியாளர் தினேஷ். இவர் மாயா gang-க்கு எதிராக உள்ளதால், மாயா & பூர்ணிமா தினேஷை எப்படி வெளியேற்றுவது? என்று பிளான் போட்டு வருகின்றனர். அதோடு மட்டுமின்றி தினேஷ் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இன்றைய நாளின் முதல் ப்ரோமோ தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில், ‘தினேஷை கன்பெஷன் ரூமுக்கு கூப்பிட்ட பிக் பாஸ் தலைவர் இது ‘சிக்ரெட் டாஸ்க்’ என டாஸ்க் பற்றி ரகசியமாக கூறினார்.இதையடுத்து வெளிய வந்த தினேஷ், சரியா பெருசா சரக்கு வரல. அதனால அதல தான் தனியா கூப்பிட்டு பேசுறார்

எல்லாரும் பண்றேன் பண்றேன்னு சொல்லிட்டு யாரும் சரியா பண்ணல என சொல்ல, முதல்ல கேரெக்டர் குடுங்கப்பா என விஷ்ணு சொல்ல, முதல்ல உன் கேரெக்டர ஒழுங்கா நடிப்பா என தினேஷ் சொல்கிறார். இதையடுத்து இருவருக்கும் இடையே மிகப்பெரிய சண்டை வெடிக்கிறது. தற்பொழுது இவ்வாறு பரபரப்பாக இந்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளிவந்துள்ளது. இதோ அந்த ப்ரோமோ…

Continue Reading

More in CINEMA

To Top