நானே கதவை திறந்து விடுறேன் வெளிய வந்துருங்க.. பிக்பாஸ் போட்டியாளர்களை வெளுத்து வாங்கிய விஜய் சேதுபதி..!

By Nanthini on மார்கழி 7, 2024

Spread the love

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். கமல்ஹாசன் அளவுக்கு விமர்சனங்களுக்கு பஞ்சம் இல்லாத விதத்தில் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கி வருகின்றார். இதுவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து ரவீந்தர், தர்ஷா குப்தா, சுனிதா, அர்னவ், ரியா தியாகராஜன், வர்ஷினி வெங்கட் மற்றும் சிவகுமார் ஆகியோர் வெளியேறியுள்ளனர். இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களுக்கு பஞ்சம் இல்லாமல் சுமார் 17 போட்டியாளர்கள் விளையாடி வருகிறார்கள்.

article_image2

   

நாட்கள் குறைவாகவும் போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் இருப்பதால் இரண்டு போட்டியாளர்களை வெளியேற்றும் சூழலில் பிக் பாஸ் உள்ளது.  கடந்த வாரமே டபுள் எவிக்ஷன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் சாச்சனா தப்பினார். ஆனால் இந்த முறை பிக் பாஸ் ஓட்டிங்கில் கடைசி இடத்தில் இருக்கும் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி இந்த வாரம் தர்ஷிகா மற்றும் ஆனந்தி ஆகியோர் வெளியேற அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

   

 

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி க்கான  இன்றைய ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், ரேயான் gang மட்டும் தனியா உட்காருங்க என்று விஜய் சேதுபதி கூறிவிட்டு இந்த டீம் ஆட்டத்தை எவ்வளவு பாதிக்குது என்று மற்ற போட்டியாளர்களை நோக்கி கேள்வி எழுப்புகிறார். அப்போது அனைவரும் எழுந்து நின்று தங்களுடைய கருத்துக்களை கூற விஜய் சேதுபதி தயவு செஞ்சு நானே கதவை திறந்து விடுறேன் நீங்களே வெளிய வந்துருங்க, அங்க இருந்து ஆட்டத்தை கெடுத்துகிட்டு இருக்காதீங்க வெளிய வந்து முடிஞ்ச அளவுக்கு சப்போர்ட் பண்ணுங்க என்று கோபத்தோடு பேசுகிறார். அது தொடர்பான ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.