rapido

Rapido ஓட்டியே பெரும் தொகையை ஈட்டிய நபர்… IT ஊழியர்களுக்கே சவால் விடும் பெங்களூரூ இளைஞர்..

By admin on மார்கழி 7, 2024

Spread the love

நம் பலருக்கு பலவித ஆசைகள் லட்சியங்கள் இருக்கும். அதற்காக தான் அன்றாடம் நாம் வேலைக்கு சென்று சிறுக சிறுக பணம் சேர்ப்பது உண்டு. எல்லோருக்கும் பணம் என்பது ஒரு அத்தியாவசியமாக ஆகிவிட்டது. இன்றைய விலைவாசி உயர்வில் நடுத்தர குடும்பம் மிகவும் பாதிப்படைந்து இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் வேறு இருக்கிறது. இதனாலே படித்த இளைஞர்கள் Swiggy Zomato Rapido போன்றவற்றில் வேலை செய்ய தொடங்கிவிட்டனர். அதில் ஒரு இளைஞர் மற்றும் மற்ற இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறார். அதை பற்றி இனி காண்போம்.

   

வேலையில்லா திண்டாட்டம் தான் நம் நாட்டில் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. அப்படியே பிடித்தவர்களுக்கு வேலை கிடைத்தாலும் வேலைக்கான சம்பளம் கிடைப்பதில்லை. கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை பார்த்தாலும் கூட எப்போது அங்கிருந்து வேலையை விட்டு வெளியே அனுப்புவார்கள் என்று கூற முடியாது. இதனாலே படித்துவிட்டு வெளியே வரும் இளைஞர்களுக்கு இதுவே ஸ்ட்ஸ்சாக மாறிப்போகிறது. ஆனால் அதையும் தாண்டி ஒரு சில இளைஞர்கள் தங்களுக்கு கிடைத்த ஒரு சிறு வாய்ப்பையும் பெரிதாக நினைத்து அதை வெற்றிப் பாதையில் கொண்டு செல்கின்றனர்.

   

Swiggy Zomato போன்றவற்றில் இளைஞர்கள் வேலை பார்ப்பது போலவே தற்போது வேகமாக வளர்ந்து வரும் நிறுவனம் தான் Rapido பைக் டேக்ஸி. இந்த Rapido பைக் டேக்ஸில் பணிபுரியும் பெங்களூரை சேர்ந்த இளைஞர் மாதம் 85 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குவதாக ஒரு வீடியோவில் கூறியிருக்கிறார். இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

அந்த வீடியோவில் பேசும் இளைஞர் நான் சராசரியாக ஒரு நாளைக்கு 12 முதல் 13 மணி நேரம் வரை Rapido பைக் டாக்சி ஓட்டி வருகிறேன். இதன் மூலம் மாதம் எனக்கு 85 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் கிடைக்கிறது. ராப்பிடோ உபர் இரண்டிலும் மாறி மாறி நான் ஓட்டுகிறேன். இதில் நன்கு சம்பாதிக்க முடிகிறது என்று அவர் வீடியோ வெளியிட்டது பலருக்கும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி இருக்கிறது. ஏன் என்றால் ஐடி ஊழியர்களுக்கு கூட அவ்வளவு சம்பளம் கிடைப்பதில்லை. ஒரு சிலர் இது உண்மையாக இருக்காது இது அவர்களின் வியாபார யுக்தியாக இருக்கலாம் ஆள் சேர்ப்பதற்காக செய்யலாம் என்றும் ஒரு பக்கம் கூறி வருகின்றனர்.