விஜய் டிவியின் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 தற்போது 82 நாட்களை பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த வாரம் Freeze டாஸ்க் என்பதால் போட்டியாளர்களின் வீட்டில் இருந்து அனைவரும் வந்திருந்தார்கள். இந்த வாரம் குடும்பத்தினர் வாரம் என்பதால் மிகவும் எமோஷனலாகவே சென்றது. அது மட்டுமல்லாமல் நேற்று முன்தினம் எபிசோடில் யாரும் எதிர்பாரா விதமாக போட்டியாளர்களின் நண்பர்கள் உள்ளே வந்திருந்தார்கள். மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. இதுவரை பிக் பாஸ் சீசனில் நடைபெறாத ஒரு நிகழ்வு நடந்தது.
அதாவது நேற்று முன்தினம் சௌந்தர்யா விஷ்ணுவிற்கு ப்ரபோஸ் செய்த காட்சி நடைபெற்றது. இது பார்ப்பதற்கு மிகவும் க்யூட்டாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் அருணின் காதலியான அர்ச்சனா உள்ளே வந்திருந்தார். இவர் கடந்த சீசனின் வெற்றியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய எபிசோடு பார்க்கும்போது பிக் பாஸ் காதல் ஜோடிகளின் களமாக மாறிவிட்டது போல் தெரிந்தது. நேற்று வார இறுதி விஜய் சேதுபதி எபிசோடு என்பதால் பல எதிர்பார்ப்புகள் இருந்தது. இந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்று தகவல் வெளிவந்த நிலையில் விஜய் சேதுபதி Eviction கார்டோடு வந்து ஒருவரை எவிக்ட் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்று கூறினார். இதனை தொடர்ந்து போட்டியாளர் ஜெஃப்ரி வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் விஜய் சேதுபதி பிக்பாஸ் போட்டியாளர்களிடம், இன்று வெளியேறப் போகும் போட்டியாளர் யாராக இருப்பாங்க என்று நினைக்கிறீர்கள் என கேட்கிறார். பெரும்பாலான போட்டியாளர்கள் ராணவ் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார் எனக் கூறுகின்றனர். ஒட்டுமொத்த போட்டியாளர்களும் ராணவை டார்கெட் செய்ய தாமதிக்காமல் விஜய் சேதுபதி எலிமினேஷன் கார்டை தூக்கி காட்டுகிறார். அது யாராக இருப்பார்கள் என்று அனைவரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…