Categories: சினிமா

ஒரே வருடத்தில் ஒரே கதையுடன் வெளியான சூப்பர் ஹீரோக்களின் 3 படங்கள்.. இந்த விஷயத்தை யாராவது கவனிச்சீங்களா..?

Spread the love

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் மக்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு கதைக்களம் என்பது மாறிக்கொண்டே இருக்கும். அதனைப் போலவே நடிகர் நடிகைகள் மாற்றமும் சகஜம்தான். என்னதான் இருந்தாலும் 90 கால கட்டங்களில் வெளியான படங்களுடன் ஒப்பிடும்போது இந்த காலகட்டத்தில் வெளியாகும் படங்களுக்கு மவுசு குறைவாகத்தான் உள்ளது. அது மட்டுமல்லாமல் ஒரு திரைப்படத்தின் கதையை காப்பி அடித்து சற்று மாற்றம் செய்து வேறொரு படமாக எடுப்பது என்பது காலம் காலமாக தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படி 90 காலகட்டத்தில் ஒரே கதை களத்துடன் ஒரே வருடத்தில் வெளியான மூன்று திரைப்படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பூவெல்லாம் கேட்டுப்பார்:

1999 ஆம் ஆண்டு வசந்த் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் பூவெல்லாம் கேட்டுப்பார். இப்படத்தில் சூர்யா ஹீரோவாக நடித்திருந்த நிலையில் அவருக்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில்தான் முதன்முதலாக சூர்யா ஜோதிகா இருவரும் ஜோடி சேர்ந்து நடித்திருந்தனர். இந்தத் திரைப்படத்தின் கதை காதல் கதை ஆகும். சூர்யாவும் ஜோதிகாவும் தங்கள் காதலை வீட்டில் கூறி சம்மதம் வாங்க இருவரும் வீடு மாறி சென்று அவரவர் மனதில் இடம் பிடிப்பார்கள். இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

ஜோடி:

இயக்குனர் பிரவீன் காந்தி இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ஜோடி. இந்தத் திரைப்படத்தில் பிரசாந்த் மற்றும் சிம்ரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் நாசர் மற்றும் விஜயகுமார் ஆகியோர் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நடித்தவாரே இந்த படத்திலும் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் கதையும் தங்கள் காதலை வீட்டில் கூறி சம்மதம் வாங்குவதற்காக இருவரும் வீடு மாறி சென்று நடிப்பது தான். அப்படியே பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தின் கதையாக தான் இந்த படமும் அமைந்திருந்தது.

மின்சார கண்ணா:

1999 ஆம் ஆண்டு கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் விஜய், குஷ்பூ மற்றும் ரம்பா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மின்சார கண்ணா. இந்தத் திரைப்படத்தின் கதையும் காதல் கதை தான். ஆனால் இந்த படத்தின் கதை சற்று வேறு விதமாக விஜய் தன்னுடைய காதலியின் அக்காவிடம் சம்மதம் வாங்குவதற்காக தனது குடும்பத்துடன் சென்று நடித்துக் கொண்டிருப்பார். ஏறக்குறைய பார்த்தால் இந்த மூன்று திரைப்படங்களுமே ஒரே கதை களத்துடன் ஒரே வருடத்தில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Nanthini

Recent Posts

“ஆசையாக வளர்ந்த ஒரே மகள்…” அமெரிக்காவில் மாயமான மாணவி… கடற்கரை அருகே சிக்கிய செல்போன் சிக்னல்…! பகீர் சம்பவம்…!!

அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வந்த தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி திடீரென மாயமான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே…

14 minutes ago

திக் திக் நிமிடங்கள்…! ஓடி வந்து விபத்தில் சிக்கிய சிறுமி… ஓட்டுனரை தள்ளிவிட்டு பிள்ளையை தூக்கிய தாய்… இணையத்தில் விவாதத்தை கிளப்பிய வைரல் வீடியோ…!!

குழந்தைகளைக் கண்காணிக்கத் தவறிவிட்டு, அனைத்துத் தவறுக்கும் மற்றவர்கள் மீது பழிபோடும் தற்காலப் பெற்றோரின் பொறுப்பற்ற போக்கு குறித்து சமூக வலைதளங்களில்…

21 minutes ago

“6 அடி 8 அங்குல உயரமான கணவர்…” ஏர் இந்தியா விமான கழிவறையில் படும் பாடு… கலாய்க்கும் நெட்டிசன்கள்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

ஏர் இந்தியா விமானத்தில் 6 அடி 8 அங்குல உயரம் கொண்ட நபர் கழிவறையைப் பயன்படுத்தும் போது படும் சிரமங்களை…

33 minutes ago

“அந்த சிரிப்பை பாருங்க…” மாற்றுத்திறனாளியின் தன்னம்பிக்கையை கண்டு வியந்துபோன நெட்டிசன்கள்… இணையத்தில் தீயாய் பரவும் நெகிழ்ச்சி வீடியோ…!!

மும்பை வீதிகளில் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு, எவ்விதச் சோர்வுமின்றி உற்சாகமாகச் சொமேட்டோ உணவு விநியோகம் செய்துவரும் மாற்றுத்திறனாளி…

1 மணத்தியாலம் ago

“ஆண் என்பதால் வேலை கொடுக்கல…” ராபிடோ ஆட்டோ ஓட்டி கொண்டே கனவை அடைய போராடும் வாலிபர்… பயணியால் வெளிச்சத்திற்கு வந்த சோகம்… வைரலாகும் வீடியோ…!!

உத்தரப் பிரதேசத்தில் ஆசிரியர் வேலை கிடைக்காததால் ராபிடோ ஆட்டோ ஓட்டிக்கொண்டே போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் இளைஞரின் வீடியோ சமூக…

1 மணத்தியாலம் ago