இதுல பெருமைப்படுறதுக்கு என்ன இருக்கு.. அரண்வ்வை வெச்சி செஞ்ச விஜய் சேதுபதி..!!

By Nanthini on ஐப்பசி 20, 2024

Spread the love

விஜய் டிவியின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சி 7 சீசர்களை கடந்துள்ள நிலையில் தற்போது எட்டாவது சீசன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த சீசனை மக்கள் செல்வம் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த அக்டோபர் மாதம் ஆறாம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியை தற்போது இரண்டு வாரங்களை நிறைவு செய்துள்ளது. இதில் மக்களுக்கு பரிச்சயமான போட்டியாளர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். போட்டியாளர்கள் உள்ளே வந்த சில மணி நேரத்திலேயே ஆட்டமும் தொடங்கிவிட்டது. இந்த முறை ஒரே வீட்டில் ஆண் போட்டியாளர்கள் மற்றும் பெண் போட்டியாளர்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடுகின்றன.

   

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய 24 மணி நேரத்தில் மகாராஜா பட நடிகை சாச்சனா எலிமினேட் செய்யப்பட்ட நிலையில் மீண்டும் வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் அவர் உள்ளே வந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் மக்களின் குறைவான வாக்குகளை பெற்று தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சி சூடு பிடிக்க தொடங்கிய நிலையில் இந்த வாரம் போட்டியாளர் அர்ணவ் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

   

 
இந்நிலையில் இன்று வெளியாகிய முதல் ப்ரோமோவில் விஜய் சேதுபதி இடம் தர்ஷா சிக்கி வாங்கி கட்டிக் கொண்ட நிலையில், அடுத்ததாக வெளியாகி உள்ள இரண்டாவது ப்ரோமோவில் போட்டியாளர்கள் அனைவருமே அர்ணவை டார்கெட் செய்கின்றனர். இறுதியாக தீபக் எழுந்து நின்று எல்லோருமே ஒருவரை கூறும் போது இந்த சுமையையும் அவர் மீது சுமக்க விரும்பவில்லை என்று கூறுகிறார். உடனே விஜய் சேதுபதி சுமைதாங்கியா நிற்கும் நீங்க இதுக்கு என்ன சொல்றீங்க என்று அர்ணவ் நோக்கி கேள்வி எழுப்புகிறார். அதற்கு அவர் இது எனக்கு பெருமையா தான் இருக்கு என்று கூற உடனே விஜய் சேதுபதி இதில் உங்களுக்கு என்ன பெருமை, உங்களுக்கு வாய்ப்பு கிடைத்த நேரத்தை நீங்க ஏன் சரியா பயன்படுத்திக்கல என்று வச்சி செய்கிறார்.

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Vijay Television இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@vijaytelevision)