mandhra

மக்களுக்கு நல்லது செய்ய வரது பெரிய விஷயம்… அஜித் மாதிரி Husband கிடைக்கணும்… நடிகை மந்த்ரா ஓபன் டாக்…

By admin on ஐப்பசி 20, 2024

Spread the love

மந்த்ரா தென்னிந்திய சினிமாவில் பணியாற்றிய நடிகை ஆவார். ஆந்திர பிரதேசத்தில் உள்ள மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பிறந்தவர் மந்த்ரா. இவரது இயற்பெயர் விஜயா என்பதாகும். தமிழ் மலையாளம் தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் மந்த்ரா.

   

9 வயதாக இருக்கும் போதே தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா கிரியரை தொடங்கினார் மந்த்ரா. 1996 ஆம் ஆண்டு பிரியம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அடுத்ததாக விஜயுடன் இணைந்து லவ் டுடே என்ற படத்தில் நடித்தார்.

   

லவ் டுடே படத்தில் நடித்ததன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த மந்திரா அடுத்தடுத்து முன்னணி நடிகர்கள் படத்தில் நடிக்க ஆரம்பித்தார். அதன்படி பெரிய இடத்து மாப்பிள்ளை கங்கா கௌரி தேடினேன் வந்தது ரெட்டை ஜடை வயசு ஆகிய படங்களில் அஜித் அருண் விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்றார் மந்த்ரா.

 

இயக்குனர் ஸ்ரீமுனியை மணந்த மந்த்ரா அதற்கு பிறகு சினிமா விட்டு தள்ளி இருந்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது ஒரு நேர்காணலில் கலந்து கொண்டிருக்கிறார் மந்த்ரா. அதில் விஜய் மற்றும் அஜித் பற்றியும் அவர்களுடன் பணியாற்றிய அனுபவத்தை பற்றியும் பகிர்ந்து இருக்கிறார்.

அவர் கூறியது என்னவென்றால் விஜய் சார் எப்பவுமே செட்டில் அமைதியா இருப்பாரு. தேவையில்லாம பேசவே மாட்டாரு. அவர் உண்டு அவர் வேலை உண்டுன்னு இருப்பார். இப்போ அவர் எவ்வளவு உயரத்துல பிரபலமா ஆன பிறகு அவர் அரசியலுக்கு வரார்னா கண்டிப்பா மக்களுக்கு ஏதாவது பண்ணனும் என்று தான் வந்திருக்கார். அப்புறம் அஜித் சார் கூட நடிக்கும் போது அவரு நமக்கு மரியாதை தரனும் அப்படி எல்லாம் யோசிக்க மாட்டார். அவர் வருவார் அவர் வேலையை பார்ப்பாரு. நம்ம நார்மலா இருக்கலாம். ஆனா அவர மாதிரி ஒரு ஹஸ்பண்ட் கிடைக்கணும்னு நான் ரொம்ப ஆசைப்பட்டேன் என்று ஓபனாக பேசியிருக்கிறார் மந்த்ரா.