தனி ரூமுக்கு கூட்டிட்டு போய் ஆடிஷன் என்ற பெயரில் நடந்த அநீதி.. பிக்பாஸ் வீட்டில் மனம் திறந்த சௌந்தர்யா..!
தனி ரூமுக்கு கூட்டிட்டு போய் ஆடிஷன் என்ற பெயரில் நடந்த அநீதி.. பிக்பாஸ் வீட்டில் மனம் திறந்த சௌந்தர்யா..!
By Nanthini on டிசம்பர் 26, 2024
Spread the love
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். கமல்ஹாசன் அளவுக்கு எந்த ஒரு விமர்சனங்களும் வராத அளவிற்கு விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார். தவறு செய்யும் போட்டியாளர்களையும் வெளுத்து வாங்கி விடுகிறார். மற்ற சீசன்களைப் போல் இல்லாமல் இந்த சீசனில் ஆண் மற்றும் பெண் போட்டியாளர்கள் என பிரிக்கப்பட்டு நிகழ்ச்சியில் நடந்து கொண்டிருக்கிறது.
மொத்தம் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 வைல்டு கார்டு போட்டியாளர்கள் மற்றும் வாரம் தோறும் எலிமினேஷனை தொடர்ந்து தற்போது 12 போட்டியாளர்கள் உள்ளே உள்ளனர். இந்த சீசன் முடிவடைவதற்கு இன்னும் சில வாரங்கல் மட்டுமே உள்ளது. கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடந்த நிலையில் அடுத்ததடுத்த வாரங்களில் ஆர்.ஜே ஆனந்தி மற்றும் சாச்சனா, சத்யா மற்றும் தர்ஷிகா, ரஞ்சித் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இதனை தொடர்ந்து இந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுத்துள்ளார் பிக்பாஸ்.
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இரவு நேரத்தில் சௌந்தர்யா சக போட்டியாளர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது தனக்கு நடந்த அநீதி குறித்து பேசி உள்ளார். அதில், தான் பல படங்களுக்கு ஆடிசன் சென்று உள்ளேன். அப்படி ஒரு இடத்திற்கு சென்றபோது ஒருவர் ஒரு காட்சியில் என்னை நடிக்க சொன்னார். நான்தான் ஹீரோ என்னுடன் நான் சொல்றபடி நீ நடிக்க வேண்டும் என்று கூறிவிட்டார். என்னெல்லாம் பண்ண வேண்டும் என்று அவங்களும் என்கிட்ட சொல்லிட்டு இருந்தாங்க. நானும் ஆடிஷன் தான் நடக்குது என்று நினைச்சு அவங்க சொல்ற மாதிரி எல்லாம் பண்ணிட்டு இருந்தேன். ஒரு கட்டத்துல எல்லாமே எல்லாம் மீறி போயிருச்சு. எனக்கு ரொம்பவே கூச்சமா இருந்துச்சு.
அவங்க என்ன தப்பா பயன்படுத்திட்டு இருக்காங்கன்னு எனக்கு தோணல. அப்ப மட்டும் எனக்கு தெரிஞ்சிருந்தா கன்னத்தில ஆரம்பிச்சுட்டு வெளியில் வந்து இருப்பேன். ஆனா அவங்க சொல்றத கேட்டு நடந்துட்டு இருந்தேன். பிறகு ஒரு கட்டத்தில் எல்லை மீறி நடக்க தொடங்கி விட்டனர். என்னால முடியாம அங்கிருந்து நான் வெளியில வந்துட்டேன். நான் வெளியில வந்ததும் அங்கிருந்த உங்களுக்கு ஏதோ நடந்திருக்கு என்று புரிஞ்சிருச்சு. ஆனா யாருமே ஒரு வார்த்தை கூட கேட்கல. அந்த நிகழ்வை என்னால் இன்று வரை மறக்க முடியவில்லை. இந்த விஷயம் எங்க அப்பா அம்மாவுக்கு கூட தெரியாது. அதுக்கப்புறம் எந்த ஆடிஷனுக்கு சென்றாலும் ஒரு பயத்தோடு தான் நான் போவேன் என்று தனக்கு நடந்த அநீதி குறித்து கண்ணீருடன் சௌந்தர்யா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசியது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.