விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய போது கிடைத்த வரவேற்பை போலவே விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. போட்டியாளர்கள் ஏதாவது தவறு செய்தால் அவர்களை நேரடியாக தாக்கி விஜய் சேதுபதி பேசி வருகிறார். இப்படியான நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் வீட்டுக்குள் 6 வைல்டு கார்டு போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தனர். இதனால் நிகழ்ச்சி இன்னும் சூடு பிடிக்க தொடங்கிய நிலையில் கடந்த வாரம் பள்ளிக்கூடம் டாஸ்க் கொடுக்கப்பட்டது.
அதில் போட்டியாளர்கள் அனைவருமே நன்றாக விளையாடினர். இந்த நிலையில் கடந்த வாரம் அதாவது நேற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வைல்டு கார்டு போட்டியாளர் ரியா தியாகராஜன் வெளியேற்றப்பட்டார். அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போது கண்ணீருடன் வெளியேறினார். தற்போது அவர் எமோஷனலாக பேசி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில், எல்லா விஷயமும் உங்கள எவ்வளவு ரீச் ஆகி இருக்குனு எனக்கு தெரியாது. ஆனா நான் ஏதோ ஒன்னு பண்றேன் என்பது உங்கள் எல்லோருக்கும் ரீச் ஆகி இருக்கும்.
அப்படி இருந்தும் நீங்க ஏன் எனக்கு சப்போர்ட் பண்ணல என்ற விஷயம் எனக்கு கேள்வியா போயிட்டே இருக்கு. எனக்கு ஃபேம் இல்லை என்பதும் ஒரு காரணமாக இருக்குமோ என்ற கேள்வியும் எனக்குள் இருக்கு. இதையும் தாண்டி ஏன் என்ன மாதிரி ஆள் எல்லாம் உள்ளே வரக்கூடாதா, நாங்கள் எல்லாம் இதை விளையாட வேண்டும் என்று நினைக்கக் கூடாதா, மீறி ஏதாவது பண்ணா நீங்க சப்போர்ட் பண்ண மாட்டீங்களா என்று கேள்விகள் என் மண்டைக்குள் ஓடிக்கிட்டு இருக்கு. இதைத்தாண்டி எனக்கு நிறைய பேரு சப்போர்ட் பண்ணி இருக்காங்க. அவங்க எல்லோருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி வேறு என்ன சொல்வது எனக்கு தெரியல என மிகுந்த வருத்தத்துடன் பிரியா வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…