Categories: சினிமா

ச்ச.. ப்ரொமோ பார்த்து ஏமாந்துட்டோம்.. கமல் அவ்ளோ நேரம் பேசுனது இதுக்கு தானா..? மீண்டும் ஆதங்கப்பட்ட நெட்டிசன்கள்…

Spread the love

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆனது தற்பொழுது விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இறுதியாக இந்நிகழ்ச்சியில் இருந்து ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட பிரதீப் பற்றிய விவாதம் தான் தற்பொழுது இணையத்தின் ஹாட் டாபிக்காக இருந்து வருகிறது.  ஹவுஸ்மேட்கள்  சொல்வதை கேட்டு தீர விசாரிக்காமல் கமலஹாசன் இந்த முடிவை எடுத்து விட்டார் என்று பலரும் கமலஹாசனை இணையத்தில் கேள்வி கேட்டு வந்தனர்.

இந்நிலையில் பிரதீப்புக்கு ஆதரவாக பிரபலங்களும், முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்களும், ரசிகர்களும் பலரும் இணையத்தில் அவருக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர். இப்படி இணையத்தில் தற்பொழுது ஹாட் டாபிக்காக இருந்து வருகிறார் பிரதீப். அவரும் தன் பங்குக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் போட்டு இணையத்தை சூடாக வைத்துள்ளார்.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் நேற்று  கமலஹாசன் பிக் பாஸ் வீட்டில் bully gang-ஐ விமர்சிப்பது போல பல ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி இருந்தது. ஆனால் ஷோ ஒளிபரப்பாகும் போது ஷோவில் அப்படி எதுவும் இல்லை, ரெட் கார்டு கொடுத்ததில் தனது தவறு எதுவுமே இல்லை என்பதை தெளிவுபடுத்த மட்டுமே அவ்வளவு நேரம் பேசி இருக்கிறார் என நெட்டிசன்கள் தற்பொழுது கமலஹாசனை விமர்சித்து வருகின்றனர்.

தற்போது நெட்டிசன்கள் மாயா , பூர்ணிமா , ஐஷு Bully gang-ஐ ட்விட்டரில் மேலும் கேள்வி எழுப்பி வறுத்தெடுத்து வருகின்றனர். அது மட்டுமின்றி கமல்ஹாசனையும் விமர்சித்து அதிகம் பேர் பதிவு செய்து வருகின்றனர். நேற்று வந்த ப்ரோமோக்களை பார்த்த போது அவர்களுக்கு சரவெடியாக கேள்விகள் கேட்கப்பட்டு அவர்களை கமல்ஹாசன் வெளுத்து வாங்க போகிறாரார் என்று ரசிகர்கள் கருதிய நிலையில் அப்படி எதுவும் நடக்கவில்லை.

அதேபோல பிரதீப் விவகாரத்திலும் சரியான முடிவு கிடைக்கவில்லை. இதனால் ரசிகர்கள் தற்பொழுது கமலை பலவாறு விமர்சித்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். அவர்களின் இந்த பதிவுகளானது இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது. இதோ அந்த பதிவுகள்…

Begam

Recent Posts

50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து… தலைக்குப்புற கவிழ்ந்து 22 பேர் படுகாயம்… புதுக்கோட்டையில் பரபரப்பு…!!

புதுக்கோட்டை அருகே 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் தலைகுப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்…

24 minutes ago

பொம்மையை தாயாக நினைத்து வளர்ந்த குரங்கு… இன்று மற்ற குட்டிகளுக்கு பாதுகாவலனாக மாறிய அதிசயம்… கண்கலங்க வைக்கும் வீடியோ வைரல்…!!

ஜப்பான் நாட்டில் உள்ள விலங்கியல் பூங்கா ஒன்றில், பிறந்ததும் தாயால் கைவிடப்பட்டுத் தனிமையிலும் மற்ற குரங்குகளின் தாக்குதலிலும் தவித்து வந்த…

30 minutes ago

கார் கண்ணாடியை துளைத்த தோட்டாக்கள்…! நூலிழையில் உயிர் தப்பிய தந்தை மற்றும் 1 வயது மகள்… 3 கி.மீ துரத்தி சென்ற கும்பல்… பகீர் வீடியோ…!!

பஞ்சாப் மாநிலத்தில் பட்டப்பகலில் தனது சிறிய மகளுடன் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த நபரை மர்ம கும்பல் ஒன்று காரில்…

57 minutes ago

போனட்டில் தொங்கியபடி அலறிய காவலர்… காரில் 200 மீட்டர் இழுத்து சென்ற பயங்கரம்… மும்பையில் பகீர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் கான்ஸ்டபிளைக் கார் ஒன்றில் அடித்து, போனட்டில் வைத்து 200…

1 மணத்தியாலம் ago

“ரூ.70 கோடி பேரம்… ஆட்சியைக் கவிழ்க்க நடக்கும் மெகா சதி”…. உளவுத்துறை ரிப்போர்ட்டால் அதிரடி காட்டிய முதல்வர் விஜய்…. நவம்பர் 13-க்குப் பிறகு காத்திருக்கும் டுவிஸ்ட்…!

வெளியாகியுள்ள அரசியல் செய்தித் தகவல்களின்படி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பதவியேற்று ஆறு மாதங்களை நிறைவு செய்துள்ள…

2 மணத்தியாலங்கள் ago