‘நீங்க சொன்னத நான் பாத்தேனே நிக்சன்’… ஐஷு- நிக்சன் விவகாரம்… மாட்டிகிட்டு முழிக்கும் நிக்சன்.. வெளியான பரபரப்பு ப்ரோமோ…

By Begam

Published on:

விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது ஒளிபரப்பாகி  வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆனது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சனையுடன் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. சண்டைக்கு மட்டும் பஞ்சம் இல்லாத இந்த சீசனில் தினம் தினம் போட்டியாளர்கள் தங்களுக்குள் சண்டையிட்டு வருகின்றனர். இதுவரை களமிறக்கப்பட்ட 23 போட்டியாளர்களில் இதுவரை 8 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

   

தற்பொழுது 14 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் உள்ளனர். பல தலைவர்களை பார்த்த இந்த பிக் பாஸ் வீட்டில் தற்பொழுது வைல்ட் கார்டு என்ட்ரியில் வந்த தினேஷ் பிக் பாஸ் வீட்டின் தலைவராக உள்ளார். இந்நிலையில் நேற்றைய எபிசோடில் நாம் பார்த்திருப்போம். ஒர்ஸ்ட் போட்டியாளர் என விசித்ராவையும், அர்ச்சனாவையும் ஹவுஸ்மேட்க்கள் டார்கெட் செய்து ஜெயிலுக்கு அனுப்ப பார்த்தனர் .ஆனால் இருவரும் நாங்கள் போக மாட்டோம் என்று கார்டன் ஏரியாவில் அமர்ந்திருந்தனர்.

  

இதனைத் தொடர்ந்து நிக்சன், விசித்திரா இடையில் ஐஷு விஷயத்தை வைத்து சண்டை மூட்டி விட்டு வேடிக்கை பார்த்தார் மாயா. தற்போது இந்த விவகாரம் இன்று கமலஹாசனை அடைந்துள்ளது. இந்நிலையில் இன்றைய நாளின் மூன்றாவது ப்ரோமோ  இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த ப்ரோமோவில் விசித்ரா ‘ நிக்சன் வந்து என்கிட்ட சொன்னாரு. நான் உங்களை விசித்திரா மேம்’ னு கூப்பிடணும்னா நீங்க என்னை நிக்சன் சார்’னு கூப கூப்பிடுவீங்களா? ‘ என கேட்டார்.  நான் அப்படித்தான் ஆரம்பிச்சிருக்கேன்’ என கமலஹாசனிடம் கூறுகிறார்.

‘சார்’னு  கூப்பிடுங்கன்னு நான் சொல்லவே இல்ல’ என்று நிக்சன்  கூற உடனே, கமலஹாசன் ‘நீங்க சொன்னதை நான் பார்த்தேனே’ என்று கேட்கிறார். ‘எனக்கு ஞாபகம் இல்லையே’ என்று அவர் கூற மீண்டும் கமலஹாசன் ‘எங்களுக்கு ஞாபகம் இருக்கு’ என்று நிக்சனை வறுத்தெடுக்கிறார். இதற்கு பொதுமக்கள் கைதட்ட ‘உங்களுக்கு இதெல்லாம் தப்புன்னு தோணவே இல்லையா? என்று கேட்கிறார்.  இப்படி இன்று நிக்சன் நிக்சனை கமலஹாசன் வருவரு என்று வறுத்தெடுத்துள்ளார். தற்பொழுது இந்த ப்ரோமோ வீடியோவானது இணையத்தில் வெளியாகி பைரலாகி வருகிறது. இதோ அந்த ப்ரோமோ…