‘வனிதா நீங்க எதுவுமே செய்யாம இருந்தா போதும்’… அடிவாங்கி முகம் வீங்கி போன வனிதா… பிரதீப் போட்ட ட்விட்டர் பதிவு…

By Begam on கார்த்திகை 26, 2023

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆனது பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியானது இன்றுடன் 57 நாட்களையும் நிறைவு செய்துள்ளது. ஆனால் மக்களால் இதுவரை யார் வெற்றியாளர்? யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து தெளிவான முடிவை எடுக்க முடியவில்லை. ஏனெனில் போட்டியாளர்கள் ஒவ்வொரு நாளும் தங்களது தனி முகத்தை காட்டி வருகின்றனர்.

Actress Vanitha Vijayakumar

   

இந்நிகழ்ச்சியை விட்டு ரெட் கார்ட் கொடுத்து வெளிய அனுப்பப்பட்ட முக்கிய போட்டியாளர்களில் ஒருவர் தான் பிரதீப் .இவருக்கு ரெட் கார்ட் கொடுத்ததற்காக சமூக வலைத்தளங்களில் பல்வேறு தரப்பினர் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர். இருப்பினும் தற்பொழுது இவர் அதனை ஏற்றுக் கொண்டு தனது அடுத்த கட்ட வேலையை நோக்கி நகர்ந்து விட்டார்.

   

 

டைட்டில் வென்றிருந்தால் கூட இவ்வளவு பிரபலமாக இருக்க மாட்டார். ஆனால் தற்பொழுது இவருக்கு என இணையதள பக்கத்தில் பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் இன்று நடிகை வனிதா ‘தன்னை பலமாக யாரோ அடித்ததாகவும், அவர் ‘ரெட் கார்ட் கொடுக்கிறீர்களா? என்று கேட்டதாகவும், எனவே அவர் பிரதீப் ஆண்டனியின் ஆதரவாளர் தான் எனவும் கூறி அடிபட்ட காயத்துடன், புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். இந்த புகைப்படமானது இணையத்தில் தற்போது வெளியாகி படுவைரலானது.

இதைத் தொடர்ந்து பிரதீப் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ Clarification: I really don’t have anything against any of my contestants or anyone. I speak like this with them. I’m not aware of what happened to you, but I feel sorry for you. Take rest. Jovika is smart, she can win it by herself, she doesn’t need your help’ என கூறி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரின் இந்த பதிவானது இணையத்தில் தற்பொழுது வைரலாகி வருகிறது. இதோ அந்த பதிவு…