அனன்யா போனாலும் இந்த வாரமும் எலிமினேஷன் இருக்கு.. பிக் பாஸ் வீட்டை விட்டு பெட்டியை கட்டும் அந்த போட்டியாளர் யார் தெரியுமா..? 

By Begam on மார்கழி 16, 2023

Spread the love

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இன்னும் 4 வாரங்களில் முடிவடைய இருக்கும்  நிலையில் 13 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் உள்ளனர். இவர்களில் வாரம் ஒருவர் குறைந்த வாக்குகளின் அடிப்படையில்  வெளியேற்றப்படுவார்கள்.

   

ஆனால் கடந்த வாரம் மிக்ஸாம் புயல், சென்னை வெள்ளத்தின் காரணமாக எலிமினேஷன் இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து இந்த வாரம் இரண்டு எவிக்சன் கூட இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது .அதன்படி இந்த வார நாமினேஷனில் அர்ச்சனா, தினேஷ், விஷ்ணு, நிக்சன், கூல் சுரேஷ், அனன்யா என 6  போட்டியாளர்கள் இருந்தனர்.

   

#image_title

 

இவர்களில் கூல் சுரேஷ் மற்றும் அனன்யா இருவரும் குறைந்த வாக்குகள் பெற்றிருப்பதால் இருவரில் ஒருவர் தான் வெளியேற்றப்படுவார்கள் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென Mid Week Eviction நடத்தப்பட்டு அனன்யா வெளியேற்றப்பட்டார்.  தற்பொழுது பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 12 போட்டியாளர்கள் உள்ளனர்.

அனன்யா வெளியேறி விட்டதால் இந்த வார இறுதியில் எலிமினேஷன் இல்லை என்று அர்த்தம் இல்லை.  இந்த வார இறுதியிலும் கண்டிப்பாக எலிமினேஷன் இருக்கும். அதன்படி நிக்சன் மற்றும் கூல் சுரேஷ் இருவரும் கடைசி இடத்தில் உள்ளனர். இருவரில் நிக்சன் தான் வெளியேறுவார் என்று ரசிகர்களால் கணிக்கப்பட்ட நிலையில், தற்போது கூல் சுரேஷ் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருப்பதாக தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.