வெளிய காட்டு கத்து கத்திட்டு, பிக் பாஸில் வாயவே தொறக்காத Cool சுரேஷ்.. 76 நாளுக்கு வாங்குன சம்பளம் எவ்ளோ தெரியுமா..?

By Begam

Published on:

விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆனது பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது .அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியானது 78 நாட்களை இன்றுடன் நிறைவு செய்துள்ளது. இந்நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் 22 நாட்களே உள்ள நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு ஒவ்வொரு போட்டியாளர்களாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

cool2

தற்பொழுது வரை யார் பிக் பாஸ் டைட்டில் வெல்வார்கள் என்பதை ரசிகர்களால் கணிக்க முடியவில்லை. இந்நிலையில் இந்த பிக் பாஸ் வீட்டை விட்டு இறுதியாக வெளியேற்றப்பட்ட போட்டியாளர் கூல் சுரேஷ். இவர் பிக் பாஸ் வீட்டில் நுழைந்த நாள் முதலே எந்த ஒரு சுவாரசியமான விஷயங்களையும் செய்யவில்லை என்றே கூறலாம்.

   

இவர் அடிக்கடி செய்த விஷயங்களில் ஒன்று போட்டியாளர் விசித்திராவுடன் சண்டை இட்டது தான். ஆனாலும் இவர் 76 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் நாமினேஷனிலிருந்து தப்பித்து எப்படியோ இருந்து விட்டார் இந்நிலையில் தற்பொழுது வெளியேற்றப்பட்ட இவரின் சம்பளம் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக்கப்பட்டு வருகிறது.

அதன்படி இவருக்கு வாரத்திற்கு 1.5 லட்சம் சம்பளமாக பேசப்பட்டிருந்ததாம்.  இதை வைத்து பார்க்கும் பொழுது 76 நாட்களுக்கு கூல் சுரேஷிற்கு கிட்டத்தட்ட 15 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. சாப்பிட, தூங்க, வம்பிழுக்க என டாஸ்க்கள் எதையுமே சிறப்பாக செய்யாமல் சும்மாவே இருந்ததற்கு இவ்வளவு சம்பளமா? என்று ரசிகர்கள் தற்பொழுது ஆச்சரியத்தில் உள்ளனர்.