Connect with us

CINEMA

BMW கார், சொகுசு பங்களா இருந்தாலும்.. பாக்க சிம்பிளாக இருக்கும் நடிகை ஜோதிகாவின் Networth இவ்வளவா..? Lady super star-அ விட 2 மடங்கு அதிகமாம்..

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ஜோதிகா. இவர் அஜித் நடிப்பில் வெளிவந்த ‘வாலி’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் சூர்யாவுடன் இணைந்து ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தை தொடர்ந்து குஷி, அருள், மன்மதன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

Jyothika

#image_title

   

தொடர்ந்து இவர் தமிழில் நடித்த படங்கள் மிகப் பெரிய வெற்றியை அடைய பல  மொழிகளிலும் ஜோதிகாவிற்கு படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தது. முன்னணி நடிகையாக வலம் வந்த காலத்திலேயே நடிகை ஜோதிகா சூர்யாவை  2006 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிகை ஜோதிகா எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்து வந்தார். பின்னர் கடந்த 2015ல் வெளியான  ’36 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

இதை தொடர்ந்து கடைசியாக அவர் நடிப்பில் ‘உடன்பிறப்பே’ என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. சமீபத்தில் இவர் மலையாள பிரபல நடிகர் மம்முட்டிக்கு ஜோடியாக நடித்த ‘காதல் தி கோர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில்  மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகை ஜோதிகாவின் சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இவர் தற்பொழுது ஒரு திரைப்படத்தில் நடிக்க 5 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறாராம். இதோடு மட்டுமின்றி சூர்யாவுடன் இணைந்து 2D தயாரிப்பு நிறுவனத்தின்  மூலம் கோடி கோடியாகவும் சம்பாதித்து வருகிறார்.

சென்னையில் சொந்தமாக இவருக்கு 2000 சதுர அடியில் பிரம்மாண்ட பங்களாவும் உள்ளது. தற்பொழுது மும்பையில் செட்டிலான இவர்கள் 70 கோடிக்கு அப்பார்ட்மெண்ட் சொந்தமாக வாங்கியுள்ளனர். இதோடு மட்டுமின்றி ஹிந்தி படம் ஒன்றிலும் தற்பொழுது நடிக்க கமிட்டாகி உள்ளாராம் நடிகை ஜோதிகா. திரைப்படங்கள் மட்டுமின்றி விளம்பரங்களிலும் நடித்து, அதன் மூலமும் சம்பாதித்து வருகிறார்.  இது மட்டுமின்றி நடிகை ஜோதிகாவுக்கு பிஎம்டபிள்யூ, ரேஞ்ச் ரோவர், ஆடி பல ஆடம்பர சொகுசு கார்களும் உள்ளது .தற்பொழுது இவரின் சொத்து மதிப்பு மட்டும் ரூ. 330 கோடிக்கு மேல் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் சொத்து மதிப்பை விட இரண்டு மடங்கு அதிகம் என்றும் கூறப்படுகிறது.

Continue Reading

More in CINEMA

To Top