பிக் பாஸ் பவா செல்லத்துரைக்கு இவ்ளோ பெரிய மகள் இருக்காங்களா..? வெளியான குடும்ப புகைப்படம்…!

By Begam on ஐப்பசி 9, 2023

Spread the love

பரபரப்புக்கு விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத ஒரு ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இதுவரை ஆறு சீசன்கள் முடிந்துள்ள இந்நிகழ்ச்சியின் 7-வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள 18 போட்டியாளர்களில் புகழ்பெற்ற எழுத்தாளரான பவா செல்லதுரையும் ஒருவர். ஆரம்பம் முதலே சைலண்டாக இருந்ததால் இவரை நாமினேட் செய்து சுமால் பாஸ் வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். பிக்பாஸுக்கு பவா செல்லதுரை வந்ததும், அவரிடம் தினமும் போட்டியாளர்களுக்கு கதை சொல்லச் செல்லி அனுப்பி வைத்துள்ளார் கமல்.

   

ஆரம்பத்தில் சைலண்டாக இருந்த இவர், முதல் நாள் சொன்ன ஓட்டம் என்கிற பவர்புல்லான கதை மூலம் ஆட்டத்துக்கு வந்தார். அவர் சொன்ன ஓட்டம் என்கிற கதையை கேட்டு அனைவரும் அவரை பாராட்டி பேசினர். சோசியல் மீடியாவிலும் பவா செல்லதுரையின் ஓட்டம் கதைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத்தொடர்ந்து அடுத்த நாள் இவர் பெண்ணின் இடுப்பை தொட்ட எழுத்தாளர்,  இடுப்பை வர்ணித்து பேசி அனைவரையும் கடுப்பாக்கினார். தமிழ் நவீன சிறுகதைகளில் தனது தனித்துவமான மொழியாலும், கதை மாந்தர்களாலும், கதைகள் முழுவதும் நிரம்பி வழியும் மனிதர்களின் பேரன்பாலும் கவனத்தைப் பெற்றவர் எழுத்தாளர் பவா செல்லதுரை.

   

 

அவர் எழுத்தாளராக மட்டுமில்லாமல், கலை இலக்கிய செயல்பாட்டாளர், கதை சொல்லி, திரைப்பட நடிகர், இயற்கை விவசாயி என்று பல முகங்களுக்கு சொந்தக்காரர். கடந்த சில ஆண்டுகளாக அவர் கதை சொல்வதன் மூலம் மிகப்பெரிய அளவில் வாசகர்களையும் கதை கேட்பவர்களையும் தன் வசப்படுத்தியுள்ளார். அதற்கு காரணம், அந்த கதைகள் மட்டுமல்ல. பவா செல்லதுரையின் கம்பீரமான, அதே நேரத்தில் சினேகமான குரலும் மிக முக்கிய காரணம் என்றால் அது மிகையல்ல.

தற்பொழுது இவர் பிக் பாஸ் வீட்டை விட்டு தானாக வெளியேறியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், பவா செல்லத்துரையின் குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது. தனது மனைவி, மகள் மற்றும் மகனுடன் பவா செல்லத்துரை எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் தற்போது ரசிகர்களால் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்…