“உங்களுக்கு எப்படிப்பட்ட பொண்ணு வேணும்”.. பிக்பாஸ் அருண் பதிலுக்கு அர்ச்சனா கொடுத்த ரியாக்ஷன்.. வைரலாகும் வீடியோ..!

Spread the love

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் வைல்டு கார்டு மூலம் கலந்து கொண்ட நடிகை அர்ச்சனா தான் டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றார். பிக் பாஸ் தமிழ் வரலாற்றில் ஒரு வைல்டு கார்டு போட்டியாளர் டைட்டிலை வென்றது அதுதான் முதல் முறை. பிக் பாஸ் டைட்டில் வின்னரான அர்ச்சனாவும் டிவி சீரியல் நடிகரான அருண் பிரசாத் காதலித்து வருவதாக கடந்த சில மாதங்களாகவே கிசுகிசுக்கப்படுகிறது. இப்படியான நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிலையில் இந்த சீசனில் அருண் பிரசாத் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் இருக்கும் போதே தான் ஒரு பெண்ணுடன் தற்போது ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் வெளியே சென்றதும் திருமணம் நடைபெறும் எனவும் அருண்பிரசாத் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து அருண் பிரசாத் மற்றும் அர்ச்சனா காதலை ரசிகர்கள் ஏறத்தாழ உறுதி செய்தனர். இப்படியான நிலையில் அருண் பிரசாத் கேமரா முன்பு வந்து நின்று தனது காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். ஹாப்பி பர்த்டே டார்லிங் என அருண் பிரசாத் சொன்ன வீடியோவை X தளத்தில் பகிர்ந்து அர்ச்சனா, என் பிறந்தநாள் நல்லபடியாக முடிந்தது. இதைப் பார்க்க இரவு ஒரு மணி வரை காத்திருந்தேன், நன்றி கேப்டன் என தெரிவித்துள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அருண்பிரசாத்தை அர்ச்சனா காதலிப்பதை உறுதி செய்தனர்.

அர்ச்சனா பரிந்துரை செய்துதான் அருண் பிரசாத்துக்கு பிக்பாஸ் எட்டாவது சீசனில் வாய்ப்பு கிடைத்ததாக முன்பு தகவல் வெளியான நிலையில் அருணை காதலிப்பதை அர்ச்சனா தற்போது உறுதி செய்துள்ளார். இப்படியான நிலையில் தற்போது ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சி டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும்போது அதில் அருணிடம் உங்களுக்கு வரவேண்டிய மனைவி எப்படி இருக்க வேண்டும் என போட்டியாளர்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்போது அருண் வெட்கப்பட்டுக் கொண்டிருக்கும் சமயத்தில் அதனை டிவியில் பார்த்துக் கொண்டிருக்கும் அர்ச்சனாவும் வெட்கப்பட்டுள்ளார். அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அர்ச்சனா மற்றும் அருண் காதலை ரசிகர்கள் உறுதி செய்து விட்டனர்.

Nanthini

Recent Posts

காலையிலேயே ஷாக்… இந்தியாவுக்குக் காத்திருக்கும் மிகப்பெரிய ஆபத்து… குவைத்தின் அதிரடி முடிவால் உலக நாடுகளுக்கு அதிர்ச்சி…!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம், உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி இறுதியில்…

19 seconds ago

“ஆப்புன்னு நினைச்சா அதிர்ஷ்டம்” ட்ரம்ப் போட்ட ஸ்கெட்ச்… இந்தியாவிற்கு அடித்த ஜாக்பாட்… ரூ. 1 லட்சம் கோடி லாபம்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம், அந்நாட்டில் பெருநிறுவனங்களுக்கான வரி விகிதத்தைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த அதிரடி வரிச்…

3 minutes ago

“ஈரான் மீது குண்டு வீச தயார்!” – உலகை அதிரவைத்த டொனால்ட் டிரம்பின் ஓப்பனாக வார்னிங்… ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த கடைசி 24 மணிநேர கெடு…!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான தற்காலிக போர் நிறுத்தம் முடிவுக்கு வரவுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம்…

4 minutes ago

“கண்ணை மூடு.. உனக்கு ஒரு சர்ப்ரைஸ்”… காதலியின் பேச்சை நம்பிய இளைஞனுக்கு நேர்ந்த கொடூரம்…. பெங்களூரை நடுங்க வைத்த சம்பவம்…!

பெங்களூரில் காதலை வெளிப்படுத்துவதாகக் கூறி, காதலனை வீட்டிற்கு வரவழைத்து தீயிட்டு எரித்துக் கொன்ற இளம்பெண்ணின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

7 minutes ago

வாக்காளர்களைத் தொந்தரவு செய்தா தலைகீழாக கட்டித் தொங்கவிடுவோம்… அமித் ஷாவின் அதிரடி ‘வார்னிங்..!!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, டார்ஜிலிங் மாவட்டம் குர்சியோங் பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர்…

7 minutes ago

உலக நாடுகள் திக் திக்..! இன்று முடியப்போகும் ஒப்பந்தம்.. போருக்கான கவுண்ட்டவுன் ஸ்டார்ட்! அடுத்து நடக்கப்போவது என்ன..?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த இரண்டு வாரங்களாக அமலில் இருந்த தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில்,…

10 minutes ago