விஜய் தொலைக்காட்சியில் மக்களால் அதிகம் பேசப்பட்டு வந்த ஷோவாக பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இருந்தது. இந்த நிகழ்ச்சியில் 23 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டினுள் அனுப்பப்பட்டு மக்கள் நேரடியாக ஓட்டுப் போட்டு பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாடலாம் என்று முடிவு செய்வார்கள். இந்த ஷோவில் டைட்டில் வின்னராக அர்ச்சனா வெற்றி பெற்றுள்ளார்.
இதில், வைல்ட் காடு என்ட்ரி மூலம் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த அர்ச்சனா டைட்டில் வின்னராக மக்களால் தேர்வு செய்யப்பட்டிருந்தார். இதற்காக அவருக்கு 50 லட்சம் பரிசு தொகை விஜய் டிவி நிறுவனத்தால் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில், அர்ச்சனா ஒரு கோடி ரூபாய் விஜய் டிவிக்கு கொடுத்து தான் இந்த டைட்டில் வின்னரை பெற்றுள்ளார் என்ற வதந்தி கிளம்பிய நிலையில் அர்ச்சனா முதல்முறையாக பேட்டி ஒன்றில் அது பற்றி கூறியிருந்தார்.
அதில், அர்ச்சனா நான் பிக் பாஸ் ஷோவில்கலந்து கொண்டு வீட்டின் உள்ளே சென்றது என்னுடைய சினிமா வாழ்க்கையை மேம்படுத்துவதற்காகவே மட்டுமே சென்றேன் என்றும்; ஒரு கோடி இருந்தால் நான் ஒரு சிறிய படம் தயாரித்து அதில் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகி இருப்பேன் என்று ஆவேசத்துடன் கூறியிருந்தார்.
மேலும் 19 கோடி மக்கள் ஓட்டு போட்டு என்னை டைட்டில் வின்னராக தேர்ந்தெடுத்து உள்ளார்கள். 19 கோடி மக்களுக்கு 1 ரூபாய் கொடுக்க கூட என்னால் முடியாது என்று நக்கலாகவும் பதில் கூறியுள்ளார். மேலும் பிக் பாஸ் வீட்டில் இருந்தால் வெளியே என்ன நடக்கிறது என்று கொஞ்சம் கூட தெரியாது என்றும்; நான் வந்த முதல் வாரத்தில் அழுததை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருந்ததாகவும் கூறினார்.
அதனால் நான் உண்டு என் வேலை உண்டு என்றே இருந்தேன் என்றும் பேட்டியில் தெரிவித்து இருந்தார். மேலும், என்னை ஒட்டு போட்டு வெற்றியடைய செய்த மக்களுக்கு மனமார நன்றி தெரிவித்தும் அந்த பேட்டியில் கூறி இருந்தார் டைட்டில் வின்னர் அர்ச்சனா.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படம் சென்சார் வாரியத்தின் கடும் நெருக்கடிக்குப் பிறகு ஒருவழியாக (U/A) சான்றிதழ் பெற்றுள்ளது. படத்தில்…
இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளதால், தற்போது வங்கிகளில் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 7.20 சதவீதமாகக்…
கோவையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் சரத்குமார், நடிகர் விஜய் மற்றும் அவரது திரைப்பட வெளியீட்டில் நிலவும் சிக்கல்கள் குறித்து…
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, தனது வாடிக்கையாளர்கள் பெயர் மற்றும் பாலின மாற்றங்களைச் செய்வதற்குத் திருநங்கைகளுக்கான தேசிய…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு மற்றும் ஆட்சிப்…
சென்னையைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்திலும் ஜனவரி 10 நாளை சனிக்கிழமை அனைத்து பள்ளிகளும் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.…