இந்த வார நாமினேஷன் லிஸ்ட்.. சொல்லி வச்சது போல ஒரே நபரை நாமினேட் செய்த மாயா & பூர்ணிமா..

By Archana on நவம்பர் 13, 2023

Spread the love

பிக் பாஸ் சீசன் 7 தற்போது பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக ரெட் கார்டு கொடுத்து பிரதீப்பை வெளியேற்றி பிறகு இந்த சீசன் மிகவும் பரபரப்பாக உல்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்த ரெட் கார்டு விவகாரம் கமல் ஹாசன் பட டைட்டில் போல “விஸ்வரூபம்” எடுத்த நிலையில். கமல் அவர்கள் சென்ற வாரம் இது குறித்து நீண்ட நேரம் பிக் பாஸ் போட்டியாளர்களிடம் உரையாடினார்.

   

மேலும், ரெட் கார்டு உங்கள்கையில் தான் கொடுக்கப்பட்டது என்றும் முடிவுகளை நீங்கள் தான் எடுத்தீர்கள் நான் இல்லை என்று தப்பித்துக்கொண்ட கமல், மாயா கேப்டன்சி பற்றியும் நேற்று பல விதமான கேள்விகளை கேட்டு இந்த வர எபிசோடை முடித்தார். இதை பலரும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

   

 

மேலும், ஐஷு வீட்டை விட்டு வெளியேறினார். இதனால் மிகவும் வருத்தத்தில் இருக்கும் மாயா, பூர்ணிமா gang மற்ற ஹவுஸ் மெட்ஸ்கள் மீது கோவத்திலும் வெறுப்பிலும் தான் உள்ளார்கள். மேலும், இந்த வார பிக் பாஸ் ஹவுஸ் கேப்டனாக தினேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் எப்படி இந்த ஹவுஸ் மெட்ஸ்கள் handle செய்ய போகிறார் என்று நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும், இன்றைய தினம் இந்த வர நாமினேஷன் யார் யார் என்று சரியான காரணத்தோடு தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பிக் பாஸ் சொல்ல, பலர் அக்ஷய மற்றும் விக்ரம் பெயரை சொல்கிறார்கள். ஆனால் பூர்ணிமா மற்றும் மாயாவோ முபே சொல்லிவைத்து போல மணி பேரை சொல்கிறார்கள். சிலரோ விசித்தரவின் பெயரை கூட சொல்கிறார்கள்.