யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் முக்கிய போட்டியாளர்… அதிர்ச்சியில் ரசிகர்கள்… 

By Begam

Updated on:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது. இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சி  6 சீசன்களை வெற்றிகரமாக முடித்து தற்போது ஏழாவது சீசனும் தொடங்கி ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீசனில் புதிதாக இரண்டு வீடுகளாக பிரித்து ஸ்மால் பாஸ் வீடு, பிக் பாஸ் வீடு என விளையாடி வருகிறார்கள்.

   

இதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், முதல் வாரம் அனன்யா வெளியேற அடுத்து பாவா செல்லத்துரை உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வெளியேற்றப்பட்டார் . கடந்த வாரம் எவிக்ஷன் எதுவும் இல்லை ஆனால் இந்த முறை கட்டாயம் எவிக்ஷன் இருக்கும் என்று கூறப்படுகின்றது. இந்த வாரம் நடைபெற்ற ‘ஆக்சிஜன் எமர்ஜென்சி’ டாஸ்க்கில் போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் அதிகம் தாக்கிக் கொண்டனர்.

விஜய் வர்மாவின் செயல் ரசிகர்களுக்கு அதிக கோபத்தை நாளுக்கு நாள் ஏற்படுத்தி வருகிறது.  சரியோ தவறோ மனதில் பட்டதை பேசியும், செய்தும் வரும் மாயாவிற்கும் பிரதீப்பிற்கும் பெரும்பாலான ரசிகர்கள் தங்களது  ஆதரவினை இணையத்தில் தெரிவித்து வருகின்றனர்.

இதை தொடர்ந்து இந்த வாரம் நிக்சன், அக்‌ஷயா, மணி சந்திரா, விசித்ரா, ஐஸு, விஜய் வர்மா, ப்ரதீப் ஆண்டனி, மாயா கிருஷ்ணன், பூர்ணிமா, விணுஷா, மற்றும் சரவண விக்ரம் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர். இவர்களில் இந்த வார இறுதியில் பிக் பாஸ் வீட்டை விட்டு குறைவான வாக்குகள் பெற்று மக்கள் கோபத்திற்கு ஆளான விஜய் வர்மா  வெளியேற்றப்படுவார் என கூறப்படுகிறது. எதிர்பாராததை எதிர்பாருங்கள் இதுதானே பிக் பாஸ்.