பிக் பாஸ் தமிழ் சீசன் 8 தற்போது இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த வாரம் தான் இறுதி வாரம் 99 நாட்கள் கடந்து விட்டது. முத்துக்குமரன், பவித்ரா, சௌந்தர்யா, விஷால், ரயான், ஜாக்குலின் ஆகிய ஆறு போட்டியாளர்கள் வெற்றி கோப்பைக்காக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த வாரம் ஏற்கனவே வீட்டில் இருந்து எலிமினேட் ஆகி வெளியே போன போட்டியாளர்கள் மறுபடியும் உள்ளே வந்து பல குழப்பங்களை ஏற்படுத்தினார்கள். வன்மத்தை கக்கினார்கள். ரவீந்தர் கேமை திசை திருப்புவது போல் பல வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். கடந்த வாரம் எட்டு போட்டியாளர்கள் உள்ளே வந்தார்கள் இந்த வாரம் மீதி இருக்கும் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக உள்ளே வர ஆரம்பித்தார்கள்.
முன்னாள் போட்டியாளர்கள் உள்ளே வந்தவுடன் விஷாலிடம் தர்ஷிகா பிரச்சனை பற்றி ஒவ்வொருவராக பேசிக்கொண்டிருந்தார்கள். நேற்று தர்ஷிகா பிக் பாஸ் வீட்டிற்குள் வந்ததும் அவர் தரப்பு நியாயங்களை கூறி விஷாலின் தவறு எந்த இடத்தில் செய்தார் என்பதை சரியாக பேசி இவர்கள் இருவரின் பிரச்சனைக்கு அவர்களே முடிவு கட்டிவிட்டார்கள். ஏற்கனவே இந்த வாரம் தர்ஷிகா அன்சிதா வரவுக்காக தான் ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். அதேபோல் அன்ஷிதாவும் இன்று வீட்டிற்குள் வந்து விட்டார். அவர் என்னவெல்லாம் பேசினார் என்ன செய்வார் என்பது இனி தான் தெரியும்.
இதற்கிடையில் இது இறுதி வாரம் இன்னும் நான்கு ஐந்து நாட்களுக்குள் பிக் பாஸ் சீசன் 8 முடிந்துவிடும். பணப்பெட்டி இன்னும் வைக்கவில்லையே என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தார்கள். இப்போது வெளிகாகி இருக்கும் ப்ரோமோவில் பணப்பெட்டி வந்து விட்டது என்று காட்டியிருக்கிறார்கள். மேலும் இதுவரை எந்த சீசன்களிலும் நடக்காத புது டுவிஸ்ட் உடன் இந்த பணப்பெட்டி வந்திருக்கிறது.
அது என்னவென்றால் வீட்டின் Main door இடத்தில் பணப்பெட்டி வைக்கப்பட்டிருக்கும். முந்தைய சீசன்களில் யார் பணப்பெட்டி எடுக்கிறார்கள் என்று முடிவு செய்துவிட்டு பணப்பெட்டியை கையில் தூக்கி விட்டு வெளியே சென்று விடுவார்கள். ஆனால் இந்த முறை பணப்பெட்டியை எடுத்தவர்களும் விளையாட்டில் பங்கு பெறலாம் என்று பிக் பாஸ் கூறியிருக்கிறார்.
அதாவது வீட்டிற்குள் பணப்பெட்டி வைத்த இடத்திலிருந்து குறிப்பிட்ட வழி பாதை போடப்பட்டிருக்கும். அங்கிருக்கும் ஸ்கிரீனில் டைம் ஓடிக்கொண்டிருக்கும். யார் பணப்பெட்டி எடுக்க விரும்புகிறார்களோ அவர்கள் பணபட்டியை எடுத்தவுடன் அந்த ஸ்கிரீனில் தெரியும் நேரத்திற்குள் வேகமாக வீட்டிற்குள் ஓடி வந்து விட்டால் அவர்கள் விளையாட்டில் தொடரலாம். அந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் வீட்டிற்குள் வர முடியாதவர்கள் அந்த பண பட்டியை எடுத்துவிட்டு அப்படியே வெளியே சென்று விடவேண்டும் என்று பிக் பாஸ் அளித்திருக்கிறார். இது புதிய டுவிஸ்டாக தான் இருக்கிறது. தற்போது 50 ஆயிரம் ரூபாய் தான் பெட்டி வைக்கப்பட்டிருக்கிறது. இன்னும் இது எத்தனை லட்சம் வரை இந்த பணப்பெட்டி செல்லும் யார் பணப்பெட்டி எடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…