Categories: சினிமா

வெற்றி பெற்ற பணத்தை வைத்து இதை தான் செய்ய போகிறேன்… மக்களின் மனதை வென்ற முத்துக்குமரன் பகிர்வு…

Spread the love

விஜய் டிவியில் பிரபலமான ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நேற்றுடன் நிறைவடைந்து விட்டது. இந்த சீசன் அனைவரும் மனதிலும் இடம் பிடித்து விட்டது. ஏனென்றால் எந்த ஒரு டாக்ஸிக் இல்லாத ஒரு சீசன் என்ற பெயர் பெற்றது. இதிலிருந்த ஒவ்வொரு போட்டியாளர்களும் அவர்களது தனித்தன்மையை வெளியே காட்டினர். விளையாட்டு முனைப்போடு விளையாடினார் எந்த ஒரு வன்மமும் பெரிதாக இல்லை.

105 நாட்கள் வெற்றிகரமாக கடந்து இறுதி மேடையில் முத்துக்குமரன் சௌந்தர்யா ஆகியோர் வந்து நின்றனர். அதில் விஜய் சேதுபதி முத்துக்குமரன் தான் டைட்டில் வின்னர் என்று அறிவித்தார். அனைத்து மக்களின் விருப்பமும் முத்துக்குமரன் தான் ஜெயிக்க வேண்டும் என்று இருந்தது. ஏனென்றால் ஆரம்பம் முதலே முத்துக்குமரனின் விளையாட்டு அனைவரையும் கவரும் வகையில் இருந்தது. அதுவும் இல்லாமல் அவர் ஒரு சாதாரண எளிய குடும்பத்தில் இருந்து வந்தவர். மேலும் அவரது தமிழ் பேசும் விதம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இந்நிலையில் நேற்று பிக் பாஸ் டைட்டிலை வென்ற பிறகு அவருக்கு பரிசு தொகையாக 40 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் கிடைத்தது. இது மட்டுமில்லாமல் அவர் ஏற்கனவே பணப்பெட்டி டாஸ்க்கில் ஐம்பதாயிரம் வெற்றி பெற்று இருக்கிறார். இது தவிர இன்னொரு டாஸ்கில் அவருக்கு புல்லட் பைக்கும் கிடைத்திருக்கிறது. இந்த பணத்தை வைத்து என்ன செய்வீர்கள் என்று விஜய் சேதுபதி கேட்டார். அதற்கு முத்துக்குமரன் அனைவரும் ஆச்சரியபடும்படி ஒரு பதிலை கூறியிருக்கிறார்.

முத்துக்குமரன் கூறியது என்னவென்றால் எனக்கு இந்த பரிசுத்தொகை கிடைத்தவுடன் நாங்கள் வீடு கட்டி சிறிது கடன் ஆகிவிட்டது அந்த கடனை அடைக்க வேண்டும். அடுத்ததாக எனக்கு இரண்டு நெருங்கிய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கஷ்டப்படுகிறார்கள் ஏதோ என்னால் முடிந்த அளவு அவர்களுக்கு பண உதவி செய்து அவர்களுக்கு தொழில் தொடங்கி கொடுக்க வேண்டும் என்று கூறினார். அடுத்ததாக எனக்கு மிகப்பெரிய ஆசை இருக்கிறது. நா முத்துக்குமார் அவர்களின் முக்கியமான புத்தகங்களை வாங்கி நிறைய பள்ளிக்கூடங்களுக்கும் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கும் கொடுக்க வேண்டும் என்று கூறினார். இதை கேட்ட மக்கள் இப்படி ஒரு சிந்தனை கொண்டவரா முத்துக்குமாரன் என்று ஆச்சரியப்பட வைத்தது. டைட்டில் வின்னருக்கு அவர் தகுதியானவர்தான் என்று அவரை பிடிக்காதவர்கள் கூட கூறும் அளவிற்கு அவரது பேச்சு இருந்தது.

admin

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

8 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

9 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

9 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

9 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

9 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

9 மணத்தியாலங்கள் ago